இவ்வளவு காலமும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது ஜேர்மனி: ரஷ்யா தொடர்பில் போலந்து கடும் விமர்சனம்



ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது தொடர்பில் போலந்து நாடு கடுமையாக ஜேர்மனியை விமர்சித்துள்ளது.

ஜேர்மனியும் பிரான்சும் ரஷ்யாவுடன் வலிமையான உறவுகள் கொண்டிருப்பதாக விமர்சனம் முன்வைத்துள்ள போலந்து துணை பிரதமரான Jaroslaw Kaczynski, உக்ரைன் ஊடுருவலுக்கு முன்பே ஜேர்மனி ரஷ்யாவுடன் வைத்திருந்த தொடர்பையும் கண்டித்துள்ளார்.

ஜேர்மனியை விமர்சிக்க கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய Kaczynski, கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா புடினுடைய தலைமையின் கீழ் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க விரும்பவில்லை என்றும், அதன் விளைவைத்தான் நாம் இன்று பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் ஜேர்மனியின் பங்கு போலந்துக்கு திருப்தியளிக்கவில்லை என்றார் அவர்.

உக்ரைனுக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கத் தவறியதற்காக ஜேர்மனியைக் கடிந்துகொண்ட Kaczynski, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் கூட ஜேர்மனி தடை செய்ய உத்தரவிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யா, எரிவாயு விற்பனையில் கிடைக்கும் வருவாயை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதன் எண்ணெய் விற்பனை மூலம் பெறுகிறது என்று கூறிய Kaczynski, பில்லியன் கணக்கில் பணம் செலுத்தி, ரஷ்யா போன்ற ஒரு வலிமையான சக்தியை தொடர்ந்து நாம் நிரந்தரமாக ஆதரிக்கமுடியாது என்றார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவுவதற்கு முன், ஜேர்மனி தனது இயற்கை எரிவாயுத் தேவையில் 55 சதவிகிதத்தையும், தனது நிலக்கரித் தேவையில் 50 சதவிகிதத்தையும், எண்ணெய்த் தேவையில் சுமார் 35 சதவிகிதத்தையும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.