2022 ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

மும்பை: ஐதராபாத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.