போயஸ் கார்டனில்
ரஜினிகாந்த்
வசித்து வரும் பங்களாவுக்கு அருகே பிரமாண்டான பங்களாவை கட்டி வருகிறார்
தனுஷ்
. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி பூமி பூஜை நடந்தது. அந்த இடத்தை ரூ. 25 கோடிக்கு வாங்கினாராம் தனுஷ்.
ரூ. 150 கோடி செலவில் பங்களா கட்டி வருகிறார். இதற்கிடையே தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள்.
இந்நிலையில் தனுஷ் கட்டி வரும் பங்களா பற்றி ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அதாவது ரஜினியின் போயஸ் கார்டன் வீடு எனக்குத் தான் என ஐஸ்வர்யாவும், தங்கை சவுந்தர்யாவும் சண்டை போட்டார்களாம்.
இறுதியில் போயஸ் கார்டன் வீடு சவுந்தர்யாவுக்கு சென்றுவிட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யவே தனுஷை வைத்து போயஸ் கார்டனில் பங்களா கட்டச் செய்தாராம் ரஜினி.
இந்நிலையில் யாரும் எதிர்பாராவிதமாக தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். அதனால் போயஸ் கார்டன் வீடு தனுஷுக்கா இல்லை ஐஸ்வர்யாவுக்கா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஐஸ்வர்யாவுக்கு நடந்த ‘அந்த கொடூரம்’ பற்றி பேசும் நெட்டிசன்ஸ்
அடுத்த செய்திகர்ப்பமான நடிகை கஸ்தூரி…! இது என்னடா புது வில்லங்கம்…! கேள்வி கேட்டு வரும் நெட்டிசன்கள்…!