என்ன ஆச்சு சோமேட்டோ! ஆர்டர் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato இந்தியாவில் அதிகம் பயனர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனம் விரைவான டெலிவரி, கூப்பன்கள் என பல சலுகைகளை வழங்கி வருவதால், பெரும்பாலான பயனர்கள்
சோமேட்டோ
ஆப் மூலமே உணவை ஆர்டர் செய்து பெற விரும்புகின்றனர்.

இந்த நிலையில், இன்று பகல் 1:30 மணி முதல் சோமேட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுவரை நிறுவனம் இதனை உறுதி செய்யவில்லை என்றாலும், பெரும்பாலான பயனர்கள் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.

Down Detector
தளத்தில் இது தொடர்பான நிறைய புகார்கள் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவரை 3000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருக்கின்றன. பெரும்பாலான பயனர்கள் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

சோமேட்டோ 10 நிமிட டெலிவரி

Zomato வாடிக்கையாளர்களை கவர பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இனி உணவு வெறும் 10 நிமிடங்களில் வாடிக்கையாளரை சென்றடையும் என்று Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில் எப்படி இது சாத்தியம் என நெட்டிசன்கள் சோமேட்டோ நிறுவனரிடம் கேள்வி எழுப்பியிருந்தது பெரும் பேசுபொருளானது.

நம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!

மேலும், நிறுவனம் தற்போது சரியான நேரத்திற்கு டெலிவரி, இல்லை என்றால் பணம் வாபஸ் என்ற திட்டத்தினையும் செயல்படுத்து உள்ளது. இதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படவில்லை என்றால், பயனர் செலுத்திய முழு தொகையும் அவருக்கே திருப்பி அளிக்கப்படும்.

அடுத்த செய்திரியல்மி சி31 விற்பனை – ரூ.1000 தள்ளுபடி… விலை இவ்வளவு தான்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.