விஜய் ஜோடியாக நடிப்பது ராஷ்மிகாவுக்கு எவ்வளவு மகிழ்ச்சி….

'பீஸ்ட்' படம் வருவதற்கு முன்பே விஜய்யின் அடுத்த படமான விஜய் 66 பிரபலமாகி வருகிறது. இப்படத்தின் பூஜை இன்று(ஏப்., 6) சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, விஜய், ராஷ்மிகா மந்தானா, சரத்குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் தீவிர ரசிகை ராஷ்மிகா. இதற்கு முன்பு தெலுங்கில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் சிறிய வயது முதலே தான் விஜய்யின் ரசிகை என்பதை சொல்லியிருந்தார். விஜய்யின் 66வது படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அப்படத்தில் ராஷ்மிகா தான் கதாநாயகி என்று சொல்லி வந்தார்கள். நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

அறிவிப்பு வெளியான அடுத்த நாளே படத்தின் பூஜையும் நடந்து முடிந்துவிட்டது. பூஜையின் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும், அவர் எவ்வளவு தீவிர ரசிகை என்பது. தனது இரண்டு கன்னங்களிலும் கை வைத்து நம்ப முடியவில்லை என்பது போலவும், விஜய்க்கு திருஷ்டி சுத்தும் விதமாக தனது தலையில் இரண்டு கைகளை வைத்திருப்பதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தில் விஜய்யைக் காதலிக்கும் காட்சி வந்தால் நடிக்காமல் நிஜமாகவே செய்துவிடுவார் போலிருக்கிறது ராஷ்மிகா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.