நம்ம சென்னையில் ஆப்பிள் ஐபோன் 13 தயாரிப்பு – விலை குறைய வாய்ப்பு!

தைவான் நாட்டைச் சேர்ந்த Foxconn நிறுவனம், தமிழ்நாட்டு தலைநகர் சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவருகிறது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் சில பிரச்னைகள் காரணமாக ஆலையில் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டது. பிரச்னைகள் களையப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கியதை அடுத்து, புதிய
ஐபோன் 13
ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பணியில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் பச்சை நிற வேரியன்டை விற்பனைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

விலை குறையும் ஐபோன் 13

ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 11, ஐபோன் 12 ஸ்மார்ட்போன்களை காஞ்சிபுரம் பாக்ஸ்கான் ஆலையில் தயாரித்துள்ளது. கூடுதலாக,
ஆப்பிள் ஐபோன்
SE, ஐபோன் 12 ஆகியவை இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆப்பிள் தனது ஏர்பாட்ஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ போன்ற கேட்ஜெட்டுகளின் விலையை சமீபத்தில் உயர்த்தி அதிர்ச்சியளித்தது.

இவ்வேளையில் உள்நாட்டில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் தயாரிப்பை நிறுவனம் தொடங்கியுள்ளது, பயனர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போனின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சுங்கக் கட்டணங்களில் இருந்து விலக்கு, வரி போன்றவற்றில் சலுகை உள்ளதால், இந்தியாவில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 13 சிறப்பம்சங்கள்

சூப்பர் ரெட்டினா XDR தொடுதிரை, 460 பிக்சல் டென்சிட்டி (திரை அடர்த்தி)6 கோர்களைக் கொண்ட ஏ15 பயோனிக் சிப்ஐஓஎஸ் 15பின்பக்கம் 12 + 12 மெகாபிக்சல்களைக் கொண்ட இரட்டை கேமரா12 மெகாபிக்சல் செல்ஃபி கேமராபேஸ் ஐடி, காற்றழுத்தமானி (பேரோமீட்டர்), 3 ஆக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி, சுற்றுப்புற ஒளி ஆகிய உணர் கருவிகள் உள்ளது5ஜி, வைஃபை, என்.எப்.சி, ப்ளூடூத்வயர்லெஸ் சார்ஜிக் ஆதரவு
ஐபோன் வாங்க சரியான நேரம் இது!

பாக்ஸ்கான் ஆலை பிரச்னை

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில், நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஆப்பிள் ஐபோன்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு பாக்ஸ்கான் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். டிசம்பர் 18ஆம் தேதி, நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வரை வேலை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தனர். இதனையடுத்து குறைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆலை திறக்கப்பட்டது. பிரச்னையை நேரடியாக தைவான் நிறுவனமும், அமெரிக்க ஆப்பிள் நிறுவனமும் கையிலெடுத்து முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஸ்லிம் & ஸ்லீக்கான புதிய ரியல்மி லேப்டாப் – இதுல எல்லாமே டாப் ஸ்பெக்ஸ் தான்!

இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து, ஆலை நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்தனர். முக்கியமாக தொழிலாளர்கள் தங்க வைக்கப்படும் அறை மற்றும் அவர்களுக்கு பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிறுவனம் ஏற்பாடு செய்த பிறகே, ஆலையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.