ரக்‌ஷித் ஷெட்டி, பாபி சிம்ஹாவின் ‘777 சார்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாபி சிம்ஹா, ரக்‌ஷித் ஷெட்டியின் ’777 சார்லி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.

கன்னட முன்னணி நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தற்போது ‘777 சார்லி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சார்லி என்ற நாயுடனான அன்பை சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும், இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது பாபி சிம்ஹா அறிமுகமாகும் முதல் கன்னட திரைப்படம். வெளியாகும் முன்னே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள இப்படத்தை கிரண்ராஜ் இயக்கியுள்ளார்.

எதிர்பார்ப்புகளுக்குக் காரணம், தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜும் கைப்பற்றி வெளியிடுகிறார்கள். ’கேஜிஎஃப் 2’ படத்தையும் மலையாளத்தில் பிரித்விராஜ்தான் வெளியிடவிருக்கிறார். ஏற்கனவே, கார்த்திக் சுப்பராஜ் “சார்லி ஒரு அழகான படம். மனிதனுக்கும் ஒரு அற்புதமான குழந்தைக்கும் இடையிலான நிபந்தனையற்ற அன்பை சொல்லும் படம். இப்படத்தை தமிழில் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார். கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா’ படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

நீண்ட நாட்களாக வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 7  ரக்‌ஷித் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 10 ஆம் தேதி தியேட்டர்களில் கன்னடம், தெலுங்கு , மலையாளம், இந்தி, தமிழ் என 5 மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.