“கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள்”.. தனது கார் எம்.ஜி.ஆர் மாளிகை தான் செல்லும்- உதயநிதிக்கு ஓ.பி.எஸ் பதில்

தமது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என எதிர்கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவரை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக கூற தனது கார் எப்போதும் எம்.ஜி.ஆர் மாளிகை தான் செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், தாம் கடந்த முறை பேசும் போது எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும், இம்முறை அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

கடந்த வாரம் தமது காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முற்பட்டதை நினைவுகூர்ந்த உதயநிதி, தாங்கள் வெளிநடப்பு செய்து சென்றாலும் தனது வாகனத்தில் தான் செல்வீர்கள் என்றும் தானும் அப்படி தங்கள் காரில் ஏற முயன்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது காரில் கமலாலயம் மட்டும் செல்லாதீர்கள் என உதயநிதி தெரிவித்தபோது குறுக்கிட்ட ஓபிஎஸ், தங்கள் கார் எம்ஜிஆர் புரட்சி தலைவி மாளிகை தான் செல்லும் என்றார்.

 

உதயநிதி ஸ்டாலினின் தாயார் துர்கா ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளையும், உதயநிதியின் பேச்சையும் பார்த்து மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.