முகேஷ் அம்பானி ரகசிய 10 பில்லியன் டாலர் திட்டம்.. வியந்துபோன அமெரிக்காவின் நிறுவனம்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தாலும், எரிவாயு மற்றும் எரிபொருள் வர்த்தகத்தை முதன்மையாகக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில் ஹைட்ரஜன் உற்பத்தியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டுள்ள ரிலையன்ஸ் அடுத்த 10 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனக் கணித்துள்ளது அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி.

புதிய டார்கெட்.. ஸ்மார்ட்டான திட்டம் போட்ட ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அடுத்த 10 வருடத்திற்குள் ஹைட்ரஜன் மற்றும் அதனைத் தொடர்புடைய வர்த்தக அமைப்புகள் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சுமார் 10 பில்லியன் டாலக் மதிப்பீட்டைப் பெறும் மதிப்பை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் மற்றும் வருமானம் பெரிய அளவில் அதிகரிக்கும்.

மோர்கன் ஸ்டான்லி

மோர்கன் ஸ்டான்லி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் புதிய ஆற்றல் வணிகங்களில் கிட்டத்தட்ட 4-5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யும் நிலையில், இக்குழுமத்தின் மொத்த வருமானத்தில் 10 சதவீதத்தை இப்பிரிவில் இருந்து மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது என உலகளாவிய தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

52 வார உயர்வு
 

52 வார உயர்வு

இதைத் தொடர்ந்து மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் டார்கெட் விலையை 20 சதவீதம் வரையில் அதிகரித்து 3253 ரூபாய் என அறிவித்து ஓவர்வெயிட் ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2787.10 ரூபாயாக உயர்ந்து 52 வார உயர்வை எட்டியது.

நெட் அசர்ட் வேல்யூ

நெட் அசர்ட் வேல்யூ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஹைட்ரஜென் வர்த்தகம் பணமாகும் போது இக்குழுமத்தின் நெட் அசர்ட் வேல்யூ 10 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் ஹைட்ரஜென் வர்த்தகம் மூலம் ரிலையன்ஸ் 14-15 சதவீதம் வரையிலான ROCE பெறும் எனவும், விரைவில் ரிலையன்ஸ் குழுமத்தின் சோலார் பேனல் வர்த்தகத்திற்கும் டிமாண்ட் அதிகரிக்கும் என மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தனது தெரிவித்துள்ளது.

கிரீன் எனர்ஜி துறை

கிரீன் எனர்ஜி துறை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சோலார் பேனல் உற்பத்தி பிரிவில் வளர REC சோலார்-ஐ கையகப்படுத்தியுள்ளது மற்றும் அம்ப்ரி (திரவ உலோகத் தொழில்நுட்பம்), லித்தியம் வெர்க்ஸ் (LFP) மற்றும் ஃபேரடியன் (சோடியம் அயன் தொழில்நுட்பம்) ஆகியவற்றில் உரிமை அல்லது பங்குகளைக் கைப்பற்றிக் கிரீன் எனர்ஜிக்கான தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது.

 கிரீன் ஹைட்ரஜன்

கிரீன் ஹைட்ரஜன்

இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிக்க 5,500 சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான திட்டத்தை ரிலையன்ஸ் தீட்டியுள்ளது. குறிப்பாக டிரக்குகள் மற்றும் நீண்ட தூரத்திற்குப் பயணிக்கும் பேருந்துகளில் ஹைட்ரஜன் வாயு கலந்த CNG பயன்படுத்த முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Indutries Hydrogen business create $10 billion NAV says Morgan stanley

Reliance Indutries Hydrogen business create $10 billion NAV says Morgan stanley முகேஷ் அம்பானி ரகசிய 10 பில்லியன் டாலர் திட்டம்.. வியந்துபோன அமெரிக்காவின் நிறுவனம்..!

Story first published: Thursday, April 21, 2022, 15:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.