வங்கிகள் MCLR & EBLR விகிதத்தினை அதிகரித்தால் என்ன பிரச்சனை.. வட்டி அதிகரிக்குமா?

இந்தியாவில் வளர்ச்சி விகிதமானது படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள மக்கள், இனி வரும் மாதங்களில் வங்கிக் கடன்களுக்கான தவணைத் தொகையும் அதிகமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சில வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இனி படிப்படியாக ஒவ்வொரு வங்கிகளும் இந்த விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகள் தங்களது MCLR விகிதத்தினை அதிகரித்துள்ளன.

முகேஷ் அம்பானி ரகசிய 10 பில்லியன் டாலர் திட்டம்.. வியந்துபோன அமெரிக்காவின் நிறுவனம்..!

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

MCLR விகிதம் என்பது Marginal Cost of Funds Based Lending Rates என்பார்கள். இது வங்கிகள் நுகர்வோர் கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உட்புற குறிப்பு விகிதமாகும். இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன் மற்றும் புதிய கடன்களுக்கும் வட்டி விகிதம் மாறும். இது அதிகரிக்கும்போது கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இது குறையும்போது வட்டி விகிதம் குறையலாம்.

கடன்களுடன் இணைப்பு

கடன்களுடன் இணைப்பு

இந்த எம் சி எல் ஆர் விகிதமானது 2016ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்பட்டது. இது அனைத்து கடன்களும் எம் சி எல் ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டி அதிகரிப்பானது இதனுடன் இணைக்கப்பட்ட வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பல்வேறு கடன்களில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ விகிதம் எம்சிஎல்ஆர்-ஐ பாதிக்குமா?
 

ரெப்போ விகிதம் எம்சிஎல்ஆர்-ஐ பாதிக்குமா?

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினை வரவிருக்கும் ஜூன் கூட்டத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டி விகிதங்கள் உயர வழிவகுக்கலாம். இது வங்கிகளை எம் சி எல் ஆர் விகிதத்தினையும் அதிகரிக்க உந்தலாம். எப்படியிருப்பினும் இந்த விகிதங்கள் ப்ளோட்டிங் கடன் விகிதத்தினை மட்டுமே உந்தலாம்.

EBLR முறை

EBLR முறை

ஆர்பிஐ அதன் வெளிப்புற பெஞ்ச்மார்க் லிங்க்ட் லெண்டிங் ரேட் (EBLR) ஆனது ரெப்போ அல்லது ட்ரெஷரி பில் விகிதங்கள் போன்ற பெஞ்ச் மார்க் விகிதங்களுடன் இணைக்கப்பட்டது. ஆக மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கும்போது, வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டும்.

MCLR அல்லது EBLR அதிகரித்தால் என்ன பிரச்சனை?

MCLR அல்லது EBLR அதிகரித்தால் என்ன பிரச்சனை?

வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை உயர்த்தும்போது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இதனால் வாகனம், வீட்டு கடன், தனி நபர் கடன்களுக்கு வட்டியை அதிகமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். இதன் காரணமாக மாத மாதம் செலுத்தும் தவணை தொகை அதிகரிக்கலாம்.

 

இதே ரெப்போ விகிதம் அதிகரிக்கும்போது EBLR விகிதமும் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

what happens to loan rates when bank hiked MCLR or EBLR?

what happens to loan rates when bank hiked MCLR or EBLR?/வங்கிகள் MCLR & EBLR விகிதத்தினை அதிகரித்தால் என்ன பிரச்சனை.. வட்டி அதிகரிக்குமா?

Story first published: Thursday, April 21, 2022, 17:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.