'விக்ரம்' படம் இப்படித்தான் இருக்கும்: வெளியான செம மாஸ் தகவல்.!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது
கமல்ஹாசன்
நடிப்பில் ‘
விக்ரம்
‘ படத்தை இயக்கி முடித்துள்ளார்
லோகேஷ் கனகராஜ்
. கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் ஜுன் மாதம் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் படத்திலே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற லோகேஷ், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து உருவான இந்தப்படத்தில் ஒரு பாடல் கூட இடம்பெறவில்லை. லோகேஷின் தனித்துவமான இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மெஹா ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் படங்களை பார்த்தே நான் சினிமாவிற்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய தீவிர ரசிகரான லோகேஷின் இயக்கத்தில் கமல் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தீயா வேலை செய்யும் ஐஸ்வர்யா: அடுத்து ஒரு சம்பவம் இருக்கும் போலயே.!

இந்நிலையில் ‘கைதி’ படம் இருட்டிலே எடுக்கப்பட்டதை போல ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க ஜெயிலிலே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிறையில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற வரும்
பகத் பாசில்
குழுவுக்கும் கமலுக்கும் இடையில் நடக்கும் சண்டையை விறுவிறுப்பாக ‘விக்ரம்’ படத்தில் படமாக்கியுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய
விஜய் சேதுபதி
, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடித்துள்ளார். ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் 66; டைரக்டர் சொன்ன நல்ல செய்தி; குஷியில் விஜய் ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.