காத்து வாக்குல கவர்ச்சி… ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக் குவித்த சமந்தா!

Samantha Songs In Kathu Vagula Rendu Kathal Movie : தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடலில் கவர்ச்சி நடனமாடியுள்ளார்.

தமிழில் விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து பானா காத்தாடி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த இவர், குறுகிய காலத்தில் விஜய் சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்தார். தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா விஜய் சேதுபதி ஆகியோருடன் சமந்தா நடித்துள்ள இந்த படம் முக்கோன காதல் கதையை மையமாக கொண்டது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள டூடூடூ என்று தொடங்கும் பாடலின், க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சமந்தா படு கவர்ச்சியாக நடனமாடியுள்ள இந்த பாடல் தற்போது பெரும் வைரலாக பரவி வரும் நிலையில், வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. ஏற்கனவே புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்த சமந்த இந்த பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சியில் தோன்றியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.