சிவகார்த்திகேயனை பற்றி தனுஷ் சொன்ன வார்த்தைகள்..பகிரும் பிரபல நடிகர்..!

நடிகர்
தனுஷ்
இந்தியளவில் பிரபல நடிகராக இருந்தாலும் அனைவரிடமும் தன்மையுடன் பழகக்கூடியவர். ரஜினி எப்படி திரைக்கு பின்னால் எளிமையான வாழ்க்கையை பின்பற்றுகிறாரோ அவரை போலவே தனுஷும் திரைக்கு பின்னால் எளிமையை கடைபிடிப்பவர்.

வித்யாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்குகிறார்.

சூர்யா – ஜோதிகா காதலைப்பற்றி மனம்திறந்த நடிகர்..! இதெல்லாம் நடந்திருக்கா ?

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி தற்போது தனுஷை பற்றி பேசியுள்ளார். இமான் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியபோது நடிகர் தனுஷ் அவரின் திறமையை கண்டு பாராட்டினாராம்

மேலும்
மரியான்
படத்தில் தனுஷ் தான் இமான் அண்ணாச்சிக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததாகவும் இமான் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர்
சிவகார்த்திகேயன்
பற்றி தனுஷ் அப்போதே மிகவும் உயர்வாக பேசுவார் என கூறியுள்ளார் இமான் அண்ணாச்சி.

2012 ஆம் ஆண்டே தனுஷ் சிவகார்த்திகேயனின் நடிப்பை மிகவும் பாராட்டுவாராம். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவார் என அடித்து கூறுவாராம் தனுஷ். இவ்வாறு இமான் அண்ணாச்சி தனுஷுடன் பழகிய அனுபவங்களை பற்றி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தனுஷ் தயாரித்த முதல் படம் தான் எதிர்நீச்சல். இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்தியேகன் நடிப்பில் காக்கி சட்டை படத்தையும் தனுஷ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.