DigiLocker: PAN, ஆதார், டிரைவிங் லைசன்ஸை நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் நம்முடன் எப்போதும் வைத்திருப்பது எப்போது கடினமான ஒன்றாகும். பல நேரங்களில் மறந்து வீட்டில் வைத்துவிடுவோம். அத்தகைய நேரத்தில் டிஜிலாக்கர் செயலி கைக்கோடுக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்கீறீர்களா என்பது தெரியவில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயலியை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய 2 சாதனங்களில் உபயோகிக்கலாம். இந்த செயலி வாயிலாக உங்கள் ஆவணங்கள் மொபைலில் காட்டப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இது மிகவும் பாதுகாப்பான செயலி ஆகும்.

ஆதார் கார்ட், ஓட்டுநர் உரிமம், 12ஆம் வகுப்பு மார்க்ஷிட் என அனைத்தையும் பத்திரமாக சேமித்துவைத்துக்கொள்ளலாம்.

தற்போது இதனை எப்படி நாம் பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

  • முதலில் பிளேஸ்டாரில் இருந்து, டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பின்னர் செயலியை ஓப்பன் செய்து, கீழே உள்ள ‘Get Started’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த திரையில், ‘Create Account’ கொடுக்க வேண்டும்
  • அக்கவுண்ட் கிரியட் பேஜில், பல விவரங்கள் கேட்கப்படும். அதாவது, பெயர், பிறந்ததேதி, பாலினம், ஆதார் நம்பர் போன்றவற்றை பதிவிட வேண்டும். விவரங்களை நிரப்பிய பிறகு, நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் வரும். அதனை, பதிவிட வேண்டும்
  • பின்னர், உங்களுக்கான பிரத்யேக username சேலக்ட் செய்ய அறிவுறுத்தப்படும். ஒருவேளை அந்த username ஏற்கனவே இருந்தால், அதற்கான இமிடேஷன் திரையில் தோன்றும்.
  • இந்த ஸ்டேப்களை முடிந்தால், அவ்வளவு தான் அக்கவுண்ட் கிரியேட் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவையான ஆவணங்களை சேமித்து வைக்க வேண்டும்.
  • மெயின் பேஜ்ஜில், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகனம் ரெஸ்ட்டிரேஷன், கோவிட் சான்றிதழ் போன்றவை எடுப்பதற்கான குயிக் ஷாட்கட்கள் உள்ளன. இதில், ஏதெனும் ஒன்றை தேர்வு செய்து, வழிகாட்டுலை பின்பற்றினால், ஓடிபி வேரிபை மூலம் ஆவணத்தை எடுத்துவிடலாம்.
  • ஒருவேளை, மெயின் பேஜ்ஜில் இல்லாத சான்றிதழ்கள் தேவை என்றால், “Explore More கிளிக் செய்ய வேண்டும். அதில், பத்தாம் வகுப்பு, பன்னிரன்டாம் வகுப்பு மார்க்ஷீட் போன்றவற்றை சேமித்து வைக்க முடியும்.

அனைத்து விதமான ஆவணங்களும் எடுத்தபிறகு, அதனை செயலி வாயிலாக டிஜிட்டலாக சமர்ப்பிக்கலாம். இதன் உதவி மூலம், இனி ஆவணங்களை கைகளில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.