வெளிநாட்டு சிறைகளில் 8,278 இந்திய கைதிகள் உள்ளனர்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இந்திய கைதிகள் தொடர்பான கேள்விக்கு, மக்களவையில் இன்று வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 8,278 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 156 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். பல நாடுகளில் நடைமுறையில் உள்ள வலுவான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் அத்தகைய தகவலை வெளிப்படுத்த சம்மதித்தால் தவிர, கைதிகள் பற்றிய தகவல்களை … Read more

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த உள்ளதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 4-ம் தேதி 500 இடங்களில் போராட்டம் நடத்தப்படுவதாக மதுரையில் செய்தியாளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.  

பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்து ஆட்சி செய்கிறது பாஜக: காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி காட்டம்..!

டெல்லி: கர்நாடகாவில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் கட்சியினர் பணியாற்ற வேண்டும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்; பெங்களுருவில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். தற்போது உள்ள பாஜக மக்கள் விரோத அரசு என்றும் அவர் தெரிவித்தார். பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி ஆகும் என ராகுல் கூறினார்.தேர்தலில் வெற்றி … Read more

‘நீங்க சொந்தக்காரர்; ரூ2000 கொடுத்தா போதும்’ .. வைரலான அலுவலரின் வீடியோ

ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் நகை கடன் தள்ளுபடியில், உயரதிகாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, பயனாளிகளிடம் 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கும் செயல் அலுவலர் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன், 5 பவுன் நகைகள் தள்ளுபடிசெய்து, … Read more

இந்தியா விரும்பினால் ஆயுத விற்பனைக்கு தயார் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் உறுதி

இந்தியா விரும்பினால் ஆயுதம் உள்ளிட்ட தளவாடங்களை தங்கள் நாட்டில் இருந்து வழங்க தயாராக இருப்பதாக டெல்லி வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து அவர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லவ்ரோவ், இந்தியா மற்றும் … Read more

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், நடிகை மீரா மிதுன் … Read more

பாலாஜி வித்யாபீத் பல்கலையில் மகளிர் தின கருத்தரங்கம்| Dinamalar

பாகூர்,-பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில், உலக மகளிர் தினத்தையொட்டி, ‘வசீகரிக்கும் பெண்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.பல்கலைக்கழக மகளிர் குழு தலைவி பேராசிரியை சவுமியா வரவேற்றார். உறுப்பினர் செயலர் ஆஷா நோக்கவுரை ஆற்றினார்.துணைவேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா தலைமை தாங்கினார். ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி, பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக் கழக பொருளாளர் உர்ஜிதா ராஜகோபாலன் சிறப்புரை ஆற்றினர். மகளிர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், … Read more

ரவிதேஜாவின் முதல் பான் இண்டியா படம்: நாளை தொடங்குகிறது

தெலுங்கு ஸ்டார்கள் அனைவருமே தற்போது பான் இண்டியா ஸ்டார்களாக உருவாகி வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் ரவிதேஜா. இவரின் முதல் பான் இண்டியா படமான டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா நாளை (ஏப் 2) நடக்கிறது. இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இதன் தொடக்க மாதப்பூரில் உள்ள ஹெச் ஐ சி சி வளபாகத்தில் நடைபெறுகிறது. 1970களில் தென்னிந்தியா முழுமைக்கும் … Read more

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு முறை சம்பள உயர்வு..!

இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சுமார் 2 வருடத்திற்குப் பின்பும் வெளிநாட்டுச் சேவையைத் துவங்கியுள்ள நிலையில் அனைத்து நிறுவனங்களும் முழு வர்த்தகத்தைத் துவங்கத் தயாராகி வருகிறது. இதேவேளையில் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சிறப்பான சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இண்டிகோ இந்த வருடத்தில் இரண்டு முறை சம்பள உயர்வை அளிக்க தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இண்டிகோ திடீர் முடிவு.. விமான டிக்கெட் விலை குறையும், ஆனா பேகேஜ் கட்டணம் உயரும்..! … Read more

மிரிஹான சம்பவம் கடும்போக்குவாதிகளின் செயற்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு

மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு. இதனால் 39 மில்லியன் ரூபா பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை இருந்தாலும், அதனூடாக நாட்டை அராஜகப்படுத்துவதற்கான உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக … Read more