சீனா ஆபத்தில் உள்ளது! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் எச்சரிக்கை

 சீனாவின் நற்பெயர் ஆபத்தில் உள்ளது என ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், சர்வதேசத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து என ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen ட்விட்டரில் … Read more

25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை… தமிழகத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா…

இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 ஆண்கள் 16 பெண்கள் என மொத்தம் 32 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 293 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.   மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் … Read more

கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும்- ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சார்பில் … Read more

திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் உகாதி பண்டிகை நாளை நடக்கிறது

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்பட திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களில் நாளை (சனிக்கிழமை) உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பத்மாவதி தாயார் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி … Read more

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்

யாழ்ப்பாணம்: இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. கடுமையான மின்வெட்டும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிபர் உடனே பதவி விலகவேண்டும் என கோஷமிட்டனர். இன்று யாழ்ப்பாணத்தில் அரசுக்கு எதிராக … Read more

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

‘சமூக நலத்துறை விடுதியில் சேவை செய்ய வேண்டும்’ 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நூதன தண்டனை: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமலை: ஆந்திர முதல்வராக ெஜகன்மோகன் பதவியேற்றதும் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மற்றும் வார்டு செயலகங்கள் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி அனைத்து கிராமங்களிலும் செயலகங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சான்றுகள் வழங்கப்படுகிறது. ஆனால் போதிய கட்டிட ஏற்பாடுகளுடன் இந்த திட்டத்தை உருவாக்காததால் ஆங்காங்கே உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட கட்டிடங்களில் செயல்படுகிறது.இதனால் பள்ளிக்குள் வெளிநபர்கள் வந்து ெசல்லும் நிலை ஏற்படுவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதாகக்கூறி கடந்த 2020ம் ஆண்டு பொதுநலன் வழக்கு ஐகோர்ட்டில் … Read more

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் – அனுமதி சீட்டினைப் பெற வழிமுறைகள்

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண நிகழ்விற்கான கட்டண அனுமதி சீட்டினைப் பெற, நேரடியாகவும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வினை காண வரும் பக்தர்கள், 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500/- கட்டணச் சீட்டு, 2500 பேருக்கும் மற்றும் ரூ.200/- கட்டணச் … Read more

தற்கொலைக்கு முயன்ற தாய் – துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய 8 வயது மகன் – எப்படி தெரியுமா?

ஹரியாணாவில் தற்கொலைக்கு முயன்ற தனது தாயை அவரது 8 வயது மகன் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹரியாணா மாநிலம் கய்தால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவீதா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகும் இவருக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று இரவும் தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சவீதா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து, இன்று காலை தனது 8 வயது மகன் ராகுலை … Read more

நட்டாவை சந்தித்தார் நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா| Dinamalar

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வந்துள்ளார். இந்தியா-நேபாள் இடையேஇரு தரப்பு உறவுகள், வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுடனான தொடர்பு வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இன்று (ஏப்.01 இந்தியா வந்துள்ளார். பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து நாளை (ஏப்.02)தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார். புதுடில்லி: அரசு முறைப்பயணமாக நேபாள் பிரதமர் … Read more