செங்கல்பட்டில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத பாரத் பெட்ரோல் பங்கிற்கு சீல்.!

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத பாரத் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு இந்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும் போது தீ விபத்து ஏற்பட்டதாக நாக்பூரில் உள்ள வெடிமருந்து தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின் மீதான இறுதிக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்குமாறு நாக்பூரில் உள்ள தலைமை கட்டுப்பாட்டாளர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினார். … Read more

திமுக உறுப்பினரை தாக்கிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 20 பேருக்கு முன்ஜாமீன்

சென்னை: கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கிய வழக்கில் அதிமுகவை சேர்ந்த 20 நபர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் கள்ளஓட்டு போட சென்றதாக திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 20-ம் தேதி கைதான ஜெயக்குமாருக்கு … Read more

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களும் தவிப்பு

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, பணப் பரிமாற்ற சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளால் ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போர் 38 நாட்களைக் கடந்து விடைதெரியாமல் நீடித்து வருகிறது. உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு இன்னல்களைக் கடந்து பத்திரமாக இந்தியா மீட்டு வரப்பட்டுள்ளனர். இதேபோன்று இந்தியாவில் இருந்து மருத்துவ படிப்புக்காக ரஷ்யாவுக்கு சென்ற மாணவர்கள் 16 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அமெரிக்கா … Read more

ரஷ்ய எண்ணெய் கிடங்கை அழித்தது உக்ரைன்: 37 நாட்களில் எல்லை தாண்டி முதல் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி 37 நாட்கள் ஆகும் நிலையில் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய்க் கிடங்கின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது உக்ரைன் படைகள். ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ளது பெல்கொரோடு நகரம். இந்த நகரத்தில் மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு உள்ளது. இந்நிலையில் இந்த எண்ணெய்க் கிடங்கைக் குறிவைத்து உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுளது. இதில் அந்தக் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. பெல்கொரோடு மாகாண … Read more

காங்கிரஸ் சாதனையை 32 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்த பாஜக!

நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற வேண்டுமென்றால், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை எம்பிக்களை போலவே, மாநிலங்களவை எம்பிக்களின் ஆதரவும் ஒரு கட்சிக்கு அவசியம். மாநில சட்டமன்றங்களில் ஒரு கட்சிக்கு உள்ள எம்எல்ஏக்களின் வலிமையை பொறுத்தே மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்பிக்களின் எண்ணிக்கை கூடும். அந்த வகையில் பஞ்சாப், அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 13 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் … Read more

சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘ புஷ்பா ‘ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளனர். ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற சமந்தா குத்தாட்டம் போட்ட ‘ஊ சொல்றீயா’ பாடல் அதிரி புதிரி ஹிட்டடித்தது . விவேகா எழுதிய இந்தப்பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டுள்ளதாக … Read more

இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் வெளிநாடுகளுக்கு ரஷ்யா திடீர் நிபந்தனை

ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள் இன்று முதல் டாலர் அல்லது யூரோவில் பணம் செலுத்தாமல், ரஷ்யாவின் ரூபிள் கரன்சியில்தான் தொகையை செலுத்த வேண்டும் என்று அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ரஷ்ய வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் கணக்கு தொடங்கி பணத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து பெறும் இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்து உள்ளன. உக்ரைன் போர் காரணமாக சரிவுக்கு … Read more

கேரளாவில் குடிபோதையில் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி.. விரட்டிச் சென்று பிடித்த பொதுமக்களின் வீடியோ காட்சி.!

கேரளாவில் குடிபோதையில் அதிவேகமாக சென்றதோடு, பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை சக வாகன ஓட்டிகள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ வெளியாகியுள்ளது. கோழிக்கோடு அடுத்த உள்ளேரி பகுதியில் லாரி ஒன்று சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வேகமாகவும், தாறுமாறாகவும் சென்றிருக்கிறது. அந்த லாரியை பின் தொடர்ந்து கார்கள், பைக்குகளில் சக வாகன ஓட்டிகள் விரட்டிச் சென்ற நிலையில், மின்னல் வேகத்தில் சென்ற லாரி முன்னால் சென்ற பைக் … Read more

முதலிரவை சிறையில் செலவிட்ட பிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்துள்ள அடுத்த அடி

ஸ்காட்லாந்தில், தங்கள் திருமணத்தன்று ஏற்பட்ட களேபரத்தில் மணமகள் தன் தாயைத் தாக்க, மணமகனும் மாப்பிள்ளைத் தோழனும் ஆளுக்கொருபக்கம் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களைத் தாக்க, மணமக்கள் தங்கள் முதலிரவை சிறையில் செலவிட நேர்ந்தது. Uddingston என்ற நகரில், Claire (26) என்ற பெண்ணுக்கும் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது ஏதோ காரணத்துக்காக வாக்குவாதம் ஏற்பட, Claire தன் தாயான Cherry-Ann Lindsayயை தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் குத்தியிருக்கிறார். கழுத்தை … Read more

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், சலசலப்பையும் உருவாக்கி வரும்,  பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் விதமாக பரபரப்பான தகவல்களையும் பதிவிட்டு, மக்களிடையே வேறுபாட்டை எழுப்பி வந்தார். இதனால், இவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து,  அவர்மீது காவல்துறை குண்டர் சட்டம் போடப்பட்டது. கடந்த 2021ம் … Read more