ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்.!

உக்ரைனுக்கு சொந்தமான 2 ராணுவ ஹெலிக்காப்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து தற்போது தான் முதல் முறையாக ரஷ்ய பிராந்தியத்திற்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையை தாண்டி வந்து குறைந்த அளவிலான தூரத்தில் இருந்தபடி உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். இதில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் … Read more

நிதியமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு.. டெல்லி அரசு பள்ளி, கிளினிக்குகளில் ஆய்வு.!

ஜி.எஸ்.டி.நிலுவைத் தொகை உட்பட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 20ஆயிரத்து 860கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததோடு, அங்குள்ள அரசுப் பள்ளி, மருத்துவமனையை பார்வையிட்டார்.  டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, 14ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க கோரிக்கை … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அஜித்தின் ஆன்மிக ரூட்; உதயநிதியின் அரசியல் ரூட்; ரெடின் கிங்ஸ்லி காட்டில் மழை!

* ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் உதயநிதி. இனி படங்களில் அதிகம் நடிப்பதை குறைத்துக் கொண்டு, நல்ல படங்களை வெளியிடும் பணியை மட்டும் செய்யப் போகிறாராம். கமலின் ‘விக்ரம்’ படத்தை வாங்கியதும் இந்த பிளானில்தான். அந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவார்களா எனக் கமல் தரப்பில் தயக்கம் காட்டிய போது, “கமல் சாருக்கு அந்தக் கவலையே வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் உதயநிதி. இன்னொரு விஷயம், இனிமேல் அவர் வருடத்திற்கு ஒன்று அல்லது … Read more

பிரித்தானிய இளவரசருக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்த துருக்கி கோடீஸ்வரர்: வெளிவரும் பின்னணி

துருக்கி பெண் கோடீஸ்வரர் ஒருவர் அளித்த 750,000 பவுண்டுகள் லஞ்சத்தொகை காரணமாக சட்டச் சிக்கலுக்கு இலக்காகியுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ. துருக்கியரான பெண் கோடீஸ்வரர் 77 வயதான Nebahat Isbilen எனபவருக்கு கடவுச்சீட்டு பெற உதவுவதற்காக 750,000 பவுண்டுகள் ஆண்ட்ருவுக்கு சன்மானமாக அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது துருக்கியை சேர்ந்த இன்னொரு கொடீஸ்வரரால் கைப்பற்றப்பட்டு, அவர் மூலமாகவே இளவரசர் ஆண்ட்ரூ பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் ஒரு முறைகேடு என்பதை உணர்ந்த Nebahat Isbilen, இளவரசர் ஆண்ட்ரூவை தொடர்புகொள்ள, அவர் … Read more

சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது என்று அதனை உங்கள் திறமையினால் செழுமைப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  டிவிட் மூலம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு நேரடியாக சென்று, அங்குள்ள நிகழ்வுகளை கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர்கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா, அன்பில் மகேஷ் உள்பட பலர் சென்றனர். தொடர்ந்து டெல்லியில் … Read more

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.  அவனது உடல் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. அவன், டாக் மொகல்லா சோபியான் பகுதியைச் … Read more

புதிய உச்சம்- மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடி

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 25,830 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 32,378 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி உட்பட  ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.74,470 கோடி ஆகும்.  பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981 கோடி உட்பட செஸ் வரி மூலம் ரூ.9,414 … Read more

உக்ரைன் தலைநகர் கீவ் புறநகரில் கடும் சண்டை

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 37-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தியது. கீவ் நகர் மீது ஏவுகனை வீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்ளை நடத்தி கீவ்வின் புறநகர் பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவத்தால் நகருக்குள் நுழைய முடியவில்லை. அவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின் வாங்கச் செய்தனர். மேலும் கீவ் புறநகரில் சில பகுதிகளை ரஷிய படையிடம் இருந்து உக்ரைன் மீட்டது. … Read more

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு தலைமை ஆசிரியர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் தொடக்க பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் துளசிராமன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தது குறித்து டெல்லி முதலமைச்சர் நெகிழ்ச்சி ட்வீட்

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்; டெல்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பார்வையிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல, எண்ணங்களையும், கருத்துக்களையும் கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்/.