'எங்களிடம் இன்னும் ஏதாவது வாங்க இந்தியா விரும்பினால் பேசலாம்' – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

இந்திய அரசு கச்சா எண்ணெய்யுடன் இன்னும் ஏதாவது பொருட்களை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்ய நினைத்தால் அதுபற்றி பேசத் தயாராக இருப்பதாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் கூறியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியானது. ரஷ்யா, தனது நாட்டிலிருந்து விற்கும் கச்சா எண்ணெய்க்கு ரூபிளில் மட்டுமே பணம் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறியுள்ள நிலையில் … Read more

தெலுங்கு வருட பிறப்பு… சனிக்கிழமை… சிறப்பாக தயாராகிவரும் திருமலை திருப்பதி!

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கடந்த மாதம் 29 ஆம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கோயில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு, பிரகாரம் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கோவில் கோபுரம் இரவு நேரங்களில் ஜொலிக்கும் விதத்தில் மின்விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் ஜொலிக்கிறது. தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி ,நாளை அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் … Read more

'இந்தியா அதை செய்தால் ஓகே தான்!' – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பளீச்!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தம் செய்தால் அதை வரவேற்போம் என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து உள்ளார். கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல், உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், கீவ், கார்கிவ், கெர்சான், மயுரிபோல் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரஷ்யப் படைகள் தாக்குதலுக்கு பயந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் … Read more

வீர ராகவன் எங்கய்ய? பீஸ்ட் டீம் போட்டோவை பார்த்து காண்டாகும் விஜய் ஃபேன்ஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே , விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட் . இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களின் சிங்கிள் ட்ராக் வெளியாகி செம ஹிட்டடித்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை வெளியிடப்படுகிறது. பீஸ்ட் படத்தில் விஜய் வீர ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் … Read more

அபேசியா என்ற நோய் பாதிப்பால் சினிமாவில் இருந்து விலகிய புரூஸ் வில்லிஸ் – அபேசியா பாதிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிசிற்கு அபேசியா என்ற நோய்பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அவரது குடும்பத்தினர் அறிவித்த நிலையில், அந்த பாதிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். அபேசியா என்பது பிறருடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் குறைபாடு என அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் அபேசியா ஆராய்சி மையம் இயக்குநர் சுவாதி கிரண் தெரிவித்துள்ளார். அந்நோய் பாதித்தோருக்கு பேசுவது அல்லது பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் பாதிக்கப்படும் என அவர் கூறினார். இந்நோய், எழுதும் … Read more

பாஜக ஆட்சியில் கடந்த ஏழாண்டுகளில் மூன்று கோடிப்பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பாஜக ஆட்சியில் கடந்த ஏழாண்டுகளில் மூன்று கோடிப்பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தின் தும்கூரில் சித்தகங்கா மடத்தில் சிவக்குமார் சுவாமிகளின் 115ஆவது பிறந்த நாள் விழாவில் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்கள் அவர்களின் தாய்மொழியிலேயே மருத்துவம், பொறியியல் படிக்கப் பிரதமர் நரேந்திர மோடி அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் … Read more

உக்ரைன் போர்: மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக படை திரட்டும் ரஷ்யா… நேட்டோ அமைப்பு பரபரப்பு தகவல்

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா மீண்டும் படை திரட்டி வருவதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை இரட்டிப்பாக்குவதற்காக, ரஷ்யா மீண்டும் படைகளை ஒன்றுதிரட்டி வருவதாக நேட்டோ அமைப்பின் secretary general தெரிவித்துள்ளார். ரஷ்யா மீண்டும் படைகளை ஒன்றுதிரட்டவும், பொருட்களையும் படைவீரர்களையும் அதிகரிக்கவும் முயன்று வருகிறது என்று கூறியுள்ளார் நேட்டோ அமைப்பின் secretary generalஆன Jens Stoltenberg.   அத்துடன், ரஷ்யா 1,200 முதல் 2,000 படை வீரர்களை ஜார்ஜியா (Georgia) … Read more

ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு!

டெல்லி: ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக,  இதுவரை இல்லாத அளவ  மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அன்றுமுதல் இன்று வரை, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து, தொடர்ந்து வசூலை வாரிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சற்று வரி வசூல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. கடந்த … Read more

இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ரசித்து பார்த்த தாய்மாமன்

ராயபுரம்: தந்தையை இழந்த குழந்தையை தாய்மாமானிடம் வளர்ப்பதற்காக கொடுத்து விட்டு சென்ற போது அவள் வளர்ந்து பெரியவளாகி தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த  சம்பவம் சென்னை ராயபுரத்தில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை- சாந்தி தம்பதியின் ஒரே மகள். பிறந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை இறக்கவே குழந்தையை தனது தம்பி தேசப்பனிடம் சாந்தி ஒப்படைத்து விட்டு மறுமணம் செய்து கொள்கிறார். … Read more

மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு 100 உறுப்பினர்கள்… 1990-க்கு பிறகு உச்சம் தொட்ட முதல் கட்சி

புதுடெல்லி: பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.  இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி  பாஜக கைப்பற்றியது. நேற்று நடந்த தேர்தலில், அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1990க்கு பிறகு 100 உறுப்பினர்களை கடந்த முதல் கட்சி என்ற … Read more