“என்னைச் சுற்றி நடக்கும் அரசியலுக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது!" – இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. வருகிற 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் அவருடைய ஆட்சி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. பாகிஸ்தான் இந்த நிலையில், நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இம்ரான் … Read more

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் வீடு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய வீடியோ காட்சிகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வீடு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன. குரும்பலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவரது காங்கிரீட் வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகை அமைத்து சமையற்கூடமாகப் பயன்படுத்தி வந்தனர். நேற்று இரவு 9 மணியளவில் பால் காய்ச்சுவதற்காக கேஸ் அடுப்பைப் பற்றவைத்தவர்கள், பால் வைத்ததை மறந்து அவசரமாக வெளியே சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அந்தக் கொட்டகை தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. உள்ளே இருந்த கேஸ் சிலிண்டரும் பெரும் சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. … Read more

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்

புதுச்சேரி: புதுச்சேரி இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள வீட்டு உபயோக மின் கட்டணங்களுக்கான விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.2022–2023ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பலரும் இக்கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை

அமராவதி: ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் கிராம, வார்டு செயல கங்களை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு 2020-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் எம்.எம்.நாயக், விஜயகுமார், கோபாலகிருஷ்ண திரிவேதி, கிரிஜா சங்கர், ராஜசேகர், சின வீர பத்ருடு, சியாமளராவ், ஸ்ரீலட்சுமி ஆகிய 8 பேர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், இந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக உயர் … Read more

இன்றுடன் தீர்ந்தது டீசல் கையிருப்பு; பெரும் நெருக்கடியில் இலங்கை: கொழும்பு முழுவதும் ராணுவம் குவிப்பு

கொழும்பு: இலங்கையில் கையிருப்பாக வைத்திருக்கும் குறைந்த அளவு டீசல் கூட இன்று ஒருநாள் மட்டுமே தேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை ஒடுக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. … Read more

அன்று "ஓ"..ன்னு அழுத ரூபா.. ஜில்லுன்னு பாடி.. "மெளனமே பார்வையால்".. சிலிர்க்க வைத்த சிவா!

டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் நேற்று முழுவதும் ஒரே பாட்டுக் கச்சேரிதான்.. மெல்லிசையும், துள்ளல் இசையும், இன்னிசையுமாக கலக்கி விட்டார்கள்… திடீர் பாடகர்களாக அவதாரம் எடுத்த எம்.பிக்கள். சுடச் சுட விவாதங்கள்.. சூடான கோஷங்கள்.. கோபங்கள், பேப்பர் கிழிப்புகள்.. கோபாவேசப் பேச்சுக்கள்.. வெளிநடப்புகள் என எப்போதும் ஹாட்டாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.. திடீரென மைக்கைப் பிடித்து.. “காற்றில்.. எந்தன் கீதம்” ரேஞ்சுக்கு பாட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் குதூகலமாக காணப்பட்டது துணை ஜனாதிபதி வெங்கய்யா … Read more

ஏப். 19 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த முடிவு!

கொரோனா அச்சம் காரணமாக, அமலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமர் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று இல்லாத நாடாக இருந்த சமோவாவில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்டமாக, மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டது. இதை அடுத்து கொரோனா பரவல் வேகம் எடுத்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்த, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இரண்டு வாரங்களுக்கு, … Read more

#ManmadhaLeelai: கடவுள் இருக்கார்… நிம்மதி பெருமூச்சுவிட்ட வெங்கட்பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அடல்ட் கன்டென்ட் படமாக உருவாகியயுள்ள படம் மன்மத லீலை. இந்தப் படத்தில் அசோக் செல்வன் , ஸ்மிருதி வெங்கட், ரியாசுமன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஸ்னீக் பிக் முழுக்க முழுக்க முத்த மழையுடன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. படத்தின் போஸ்டர்களும் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருந்தன. இருப்பினும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இளசுகள் மத்தியில் எகிறியது. அஜித்துக்கு கேரளாவில் சிகிச்சை… வைரலாகும் போட்டோ.. கைப்பட எழுதிய கடிதம்! இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகும் … Read more

ராஜபக்ஷர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொதுமக்களின் சீற்றம் அதிகரிக்கிறது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது. மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதை அடுத்து, சமூக ஊடகங்களில் ராஜபக்சக்களுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது. சமூக ஊடக பயனர்கள், பல முக்கிய பிரமுகர்கள் உட்பட, தற்போதைய விடயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக ‘வெள்ளை துணி’ … Read more

தென்கொரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.!

தென்கொரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்ததாகவும், ஒரு விமானி படுகாயம் அடைந்திருப்பதாகவும் மீட்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் சியோலுக்கு தென்கிழக்கே உள்ள சச்சியோன் நகரில் உள்ளூர் நேரப்படி மதியம் ஒன்றரை மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் … Read more