கேரளாவில் மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடிய மாவட்ட ஆட்சியரின் வீடியோ இணையதளத்தில் வைரல்.!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. அந்த மாவட்ட ஆட்சியரான திவ்யா எஸ் ஐயர் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கலைவிழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பார்வையிட சென்றார். அப்போது அங்கு மாணவ, மாணவியர் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சந்தித்த ஆட்சியர், ஒத்திகை குறித்து கேட்டறிந்தார். அப்போது தங்களுடன் இணைந்த நடனமாடுமாறு மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்ற திவ்யா எஸ் ஐயர், நடனமாடினார். இந்த காட்சிகளை … Read more

இன்று முதல்… கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி

இன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று முதல், அதாவது, ஏப்ரல் 1 முதல், கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டாலும், கனடாவுக்கு வெளியிலிருந்து வரும் யாரானாலும், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு, பொது இடங்களில் மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டியது … Read more

தெலுங்கு, கன்னட வருடபிறப்பு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான இபிஎஸ்,ஓபிஎஸஸ்சும் உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உகாதி திருநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (ஏப்.2) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் … Read more

அனல் காற்று வீசுவதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது- பழச்சாறு விற்பனை அதிகரிப்பு

வேலூர்: தமிழகத்தில் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ம் தேதிக்கு … Read more

யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி கோவிலில் நாளை பஞ்சாங்கம் வாசிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கடந்த மாதம் 29-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் தூய்மை செய்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன. கோவில் பிரகாரம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்த பல வண்ண மலர்கள் மற்றும் பழ வகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரம் மற்றும் வெளி பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் … Read more

ரஷிய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்- உக்ரைன் மீது குற்றம்சாட்டும் ஆளுநர்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 37வது நாளாக நீடிக்கிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷிய பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வாகியுள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் 23-வது மாநில மாநாட்டில் போட்டியின்றி கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். காலையில் ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்த நிலையில் ஒன்றிய தொழில் துறை அமைச்சருடன் சந்தித்து பேசி வருகிறார்.

பாலக்கோடு: கழிவறை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் நீரெடுத்து செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்!

பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய, கிராமத்தில் உள்ள தொட்டியில் ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 1 முதல் 8 வரை 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் … Read more

மேகாலயாவில் இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து – திரிணாமூல் காங்கிரஸ் கோரிக்கை!

மேகாலயாவில் இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தா சேத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மனுவுக்கு மத்திய அரசு அண்மையில் பதில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், “இந்து மதத்தினர் குறைவாக … Read more