பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன சூப்பர் அட்வைஸ்!

அதிக மதிப்பெண்கள் எடுக்க பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ‛பரிக்ஷா பே சர்ச்சா’ என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்நிலையில், … Read more

அடேங்கப்பா …! சூப்பர் ஸ்டாருன் மீண்டும் ஜோடி போடும் பிரபல பாலிவுட் நடிகை…!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகாவா படுகோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு … Read more

2022 மார்ச்சில் 17,131 கார்களை விற்ற டொயோட்டா இந்தியா நிறுவனம்.!

டொயோட்டா இந்தியா நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் மார்ச் மாதத்தில் 17 ஆயிரத்து 131 கார்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2021 மார்ச்சில் 15 ஆயிரம் கார்கள் விற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு மார்ச்சில் விற்பனை 14 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2021 – 2022 நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிட விற்பனை 58 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 770 வாகனங்களை விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மார்ச்சில் இன்னோவா கிரிஸ்டா மாடலில் எட்டாயிரம் கார்கள் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. … Read more

மோசமான தலைமையை புறக்கணிப்போம்! இலங்கை மக்களுக்கு ஹசரங்க அழைப்பு

 இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, இலங்கை மக்களுக்கு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் சிறந்த தேசமாக திகழந்த நாம் எப்படி வீழ்ந்தோம். கட்சி அரசியல் நாட்டின் ஒருமைப்பாட்டை மற்றும் ஒற்றுமையை நாசமாக்கியுள்ளது. இலங்கை மக்களின் … Read more

நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு…

திருப்பூர்: நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. இதை சரிசெய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் பஞ்சு விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஜனவரியில் கிலோ பஞ்சுவுக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ள நிலையில்,  தற்போதுமேலும் உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கேண்டி (பஞ்சு மூட்டை) விலை (356 கிலோ) ரூ.93,500 ஆக அதிகரித்துள்ளது. அதனால், தமிழக நூற்பாலைகள், பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். … Read more

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- ராகுல் நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை பெறும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.  பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:- கர்நாடகாவில் காங்கிரசின் ஆன்மா உள்ளது. இது இயற்கையான காங்கிரஸ் மாநிலம். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 150 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோம். எனவே, நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். சரியான பிரச்சினைகளில் மற்றும் தகுதியை … Read more

சோபியான் என்கவுண்டர்- லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.  அவனது உடல் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. அவன், டாக் மொகல்லா சோபியான் பகுதியைச் … Read more

மக்கள் போராட்டத்தால் ஓட்டம்: கோத்தபய ராஜபக்சே ரகசிய இடத்தில் தங்கவைப்பு

இலங்கை அதிபர் இல்லம் அருகே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அதிபர் இல்லத்துக்குள் நுழையலாம் என்ற சூழல் உண்டானது. போலீசார் துணை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினாலும் போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன்றபடி இருந்தனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டு முன்பு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மக்கள் போராட்டம் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அவரது வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. யானைகள் இறப்பிற்கான காரணத்தை கண்டறிதல், யானைகள் இறப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

'சட்டமன்ற தீர்மானங்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் தேவை': மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கலானது..!!

டெல்லி: மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுகளின் மீது மாநில ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான கால வரம்பினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாகவும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பேசிய அவர்; சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் இதுபோன்ற சட்டத்தை … Read more