தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய டெல்டா பகுதிகள், நெல்லை, கன்னியாகுமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் … Read more

அரசிதழில் இடம்பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

மதுரை: தமிழகத்தில் அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கண்டனூர் தர்மலிங்கம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் படைப்புத் திருவிழா நடத்தப்படும். திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இந்தாண்டு படைப்புத் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை … Read more

ஏழுமலையானை தரிசிக்க மாற்றுத் திறனாளிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள்

திருமலை: முத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசனம், கரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இவர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 1-ம் தேதி ஆன்லைனில் தேவஸ்தான இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவர் களுக்கு ஆன்லைன் டிக்கெட்டு கள் 8-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென தேவஸ் தானம் நேற்று மறு அறிவிப்பு செய்துள்ளது. … Read more

மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி இந்தியா – பிரதமர் மோடி திடீர் முடிவு?

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று அதிகரித்து உள்ளது. இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து, கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை இந்தியாவில் பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை, கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து இந்தியாவில் குறையத் தொடங்கியது. இதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் … Read more

பீஸ்ட் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திலிருந்து கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியாகி செம வைரலானதை அடுத்து கடந்த வாரம் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியானது. இவ்விரு பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை காட்டிலும் யூடியூபில் பல சாதனைகளை செய்துள்ளது. எது நடந்தாலும் அதை மட்டும் நிறுத்தமாட்டேன் : … Read more

ஷூவில் கேமரா; போன் சார்ஜர் – Ixigo அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஷூஸ்!

இன்று நம்மைச் சுற்றி ஸ்மார்ட் சாதனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், இப்போது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுகிறது. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஏசிகளில் இருந்து ஸ்மார்ட் வாட்ச்கள் வரை பெரும்பாலான பொருள்கள் ஸ்மார்ட் ஆகிவிட்டது. இருப்பினும், ஸ்மார்ட் ஷூக்கள் குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தற்போது அதற்கும் ஒரு வழியை திறந்துள்ளது இக்ஸிகோ நிறுவனம். நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட் ஷூக்கள் லொகேஷன் டிராக்கர், முன் மற்றும் பின்புற … Read more

கோட்டாபயவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

மிரிஹானவில் இடம்பெற்ற மோதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மறுத்துள்ளார். தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் நினைக்கவில்லை என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். வன்முறை குழுக்கள் எதுவும் நுழைந்து வன்முறையில் செயலில் ஈடுபட்டிருக்கலாம். எனினும் தீவிரவாதிகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென்பது எங்களுக்கு தெரியும். அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more

இளம்பெண்ணின் பெண்ணின் காதில் இருந்து நண்டை லாவகமாக எடுக்கும் வீடியோ

இளம்பெண் ஒருவரின் காதில் புகுந்த நண்டை லாவகமாக வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. கரிபீயன் தீவுகளில் ஒன்றான  Puerto Rico தீவில் இளம்பெண் ஒருவர் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவரது காதில் சிறிய நண்டு ஒன்று எதிர்பாராமல் புகுந்துள்ளது. இதனால் வலியில் அலறித் துடித்த அந்த பெண்ணின் நிலை கண்டு அருகில் இருந்த நபர் ஒருவர் இடுக்கி போன்ற சிறிய கருவி மூலம் காதில் புகுந்த … Read more

நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்வு

நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 புள்ளி 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது. அதே போல, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் விலையும் … Read more

2023இல் பெரும்போராக வெடிக்க இருக்கும் உக்ரைன் போர்? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் ‘Les Propheties’. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வகையில், அவர் இந்த உக்ரைன் ரஷ்யப் போர் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என அறிய மக்கள் ஆர்வம் … Read more