இலங்கை அதிபர் இல்லம் முற்றுகை: கொழும்புவில் கண்காணிப்பு தீவிரம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்நாட்டு மக்கள் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்ததால், காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகியுள்ளது. மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் நாள் ஒன்றுக்கு … Read more

ஒரே முறையில் ரூ.12,450 கோடி கடனைத் திருப்பிச் செலுத்திய சபூர்ஜி பலோஞ்சி கம்பெனி

மும்பையைச் சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே முறையில் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. டாட்டா குழுமத்தில் 18 புள்ளி 7 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ள சபூர்ஜி பலோஞ்சி குழுமம் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து, மின்னுற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. கொரோனா சூழலில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டதால் இந்நிறுவனம் கடன் சுமையால் தத்தளித்தது. இப்போது பொறியியல், கட்டுமானப் பணிகள் வேகம்பெற்றுள்ளன. இந்நிலையில் பல்வேறு வங்கிகள் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு … Read more

ரஷ்ய படைகள் வெளியேறுகின்றன! உக்ரைன் முக்கிய தகவல்

\ ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்-ரஷ்யா பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, உக்ரைனின் கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டது. ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன் ஹெலிகாப்டர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்  ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து அவநம்பிக்கையை வெளிப்படுத்திய உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், களத்தில் தாக்குதல்கள் குறைந்ததை கண்டால் மட்டுமே … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை – நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பேன்! இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி, ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. இதனால், பெரும்பான்மை இழந்துள்ள இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டேன், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன் என்றும், தன்னை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இம்ரான்கான் அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வரும் 3ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கிடையில்,  இம்ரான்கான் … Read more

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.20,860 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்- நிதி மந்திரியிடம் மு.க.ஸ்டாலின் மனு

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகு மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் … Read more

தேர்வை பண்டிகையாக கொண்டாட தொடங்குங்கள் – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.  இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்வு என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். மாணவர்கள் தேர்வின் போது பதற்றமடைவதில் இருந்து விலகி … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 462 புள்ளிகள் உயர்ந்து 59,031 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 462 புள்ளிகள் சரிந்து 59,031 புள்ளிகளில் வர்த்தமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 126 புள்ளிகள் குறைந்து 17,590 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

பெண் நடனக் கலைஞருக்கு துன்புறுத்தல் ‘டான்ஸ் மாஸ்டர்’ மீது பாலியல் வழக்கு: மும்பை போலீஸ் அதிரடி

மும்பை: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரம் தொடர்பாக டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது உதவியாளர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். பாலிவுட் நடன இயக்குனர் மற்றும் நடிகர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக மும்பை காவல்துறை பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த 2020ம் ஆண்டில் பெண் நடனக் கலைஞர் ஒருவர் (35), கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிராக அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் … Read more

இரண்டு மாடல்களிலும் விளம்பரங்கள் தான் வேலை செய்கின்றன!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 31-ம் தேதி தேதிக்கான தலைப்பாக ” மோடி மாடல் Vs திராவிட மாடல்… எது சிறந்த மாடல்…?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த … Read more

3 ஆண்டுகளில் 7 முறை மின் கட்டண உயர்வு… போராட்டத்தில் இறங்கிய ஆந்திர எதிர்க்கட்சி

ஆந்திராவில் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைக்குறிப்பிட்டு குற்றம்சாட்டி தெலுங்கு தேச கட்சியினர் இன்று அரிக்கேன் விளக்கை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் `மின் கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது மண்ணெண்ணெயில் எரியும் அரிக்கேன் விளக்கை நாரா லோகேஷ் கையில் ஏந்தியபடி வர, பிற நிர்வாகிகளும் தொண்டர்களும் … Read more