சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

எல்லைக் கட்டுப்பாட்டு பிரச்சினையில் சீனா அத்துமீறினாலோ அல்லது இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தினாலோ நிச்சயம், ரஷ்யா , இந்தியாவுக்கு உதவி செய்யாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு, அமெரிக்கா நெருக்குதல் கொடுத்து வருகிறது. ரஷ்யாவுடன் பேசக் கூடாது, ரஷ்யாவைக் கண்டிக்க வேண்டும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்தியா இதை சட்டை செய்யவில்லை. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் … Read more

கோத்தபயா வீட்டுக்கு வெளியே "அட்டாக்".. தீவிரவாதிகள் அட்டகாசம் இது.. அலறும் இலங்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள் தற்போது மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டுக்கு வெளியே நேற்று இரவு பெரும் வன்முறைத் தாக்குதல் நடைபெற்றது. இதற்குத் தீவிரவாதிகள்தான் காரணம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உலகம் முழுக்க ஊர்ப்பட்ட கடன்களை வாங்கிக் குவித்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள் மக்களிடமிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். தங்களது கடன்களை அடைக்க இந்தியாவிடம் கடன் … Read more

நயன்தாராவுக்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய விக்கி: அதிர்ச்சியில் 'ஏகே 62' படக்குழு..!

நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் கடந்த மாதம் ‘வலிமை’ படம் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வலிமை’ படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. வலிமையை தொடர்ந்து … Read more

கண்காட்சியை ஆரம்பித்து வைக்க சென்ற ஷிரந்தி ராஜபக்ச: நுவரெலியா மக்கள் கொடுத்த பதிலடி

நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபகச அங்கு சென்றிருந்தார். இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர். இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அமெரிக்காவில் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி பாய்ந்த மின்னல்.. பாதசாரி எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்

அமெரிக்காவில் கொட்டும் மழைக்கு மின்காந்த சக்தி மூலம் மின்னல் மீண்டும் வானோக்கி பாயும் அரிய நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மிஸ்சஸ்சபி, புளோரிடா, கான்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி மீண்டும் எழும்பிய அரிய நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது. உயரமான கட்டடத்தின் மின்காந்த சக்தியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவும் போது இதுபோன்ற அரிய … Read more

நன்றாகப் படித்தால் அச்சமின்றித் தேர்வெழுதலாம் – பிரதமர் மோடி

நேரடி வகுப்பில் கற்பதே இணைய வழியிலும் உள்ளதால் கற்றலுக்கான வழிமுறை ஒரு தடையில்லை என்றும், கருத்தூன்றிப் படித்தால் அச்சமின்றித் தேர்வெழுதலாம் என்றும் பிரதமர் மோடி. தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும், தேர்வு பற்றிய விவாதம் என்னும் நிகழ்ச்சி டெல்லி தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தேர்வுகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் எனத் தெரிவித்தார். அஞ்சாமல் பிறரைப் பார்க்காமல் தான் படித்ததைக் கொண்டு நம்பிக்கையுடன் தேர்வெழுத … Read more

ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன் ஹெலிகாப்டர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்

 உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக பிராந்திய கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் Belgorod நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு உக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகளை ஏவி எண்ணெய் கிடங்கை தாக்கியதாக Belgorod பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை. துரோகிகள்… தண்டனை உறுதி: உக்ரைன் அதிகாரிகள் மீது கொந்தளித்த ஜெலென்ஸ்கி  தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் … Read more

#தன்_வினை_தன்னைச்சுடும்!

நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… #இலங்கை_பயணக்குறிப்புகள்_13 #தன்_வினை_தன்னைச்சுடும் —————————————————— “தன்வினை தன்னைச் சுடும்” என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக நான் உணர்ந்தேன். இலங்கையில் இறுதிப் போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே சகோதரனுடைய நிலைமை இன்றைக்கு மிகவும் மோசமாக இருக்கிறது. அதிபர் மாளிகையை நோக்கியே மக்கள் திரண்டு விட்டனர் நேற்று இரவு. இது எப்படி என்றால், பிரஞ்சுப் புரட்சியில் மேரி அண்டாய்னட்டே எதிர்நோக்கி மக்கள் சென்றது போல, … Read more

தேசத் துரோகம் செய்த 2 அதிகாரிகள் பதவிநீக்கம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று படையெடுப்பு தொடங்கிது. அன்று முதல் தற்போது வரை ரஷிய படைகள் குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது 153 குழந்தைகளைக் கொன்றது. மேலும், 245 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், தேச துரோகம் செய்த … Read more

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் ரஷிய வெளியுறவு மந்திரி சந்திப்பு

புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா இதுவரை நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.   இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் இன்று நேரில் சந்தித்தார். போரை கைவிட்டு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி … Read more