மலேசியாவில் டுவின் டவரை தாக்குவது போன்று ஏற்பட்ட கண்கவர் மின்னல்!
மலேசியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததற்கு மத்தியில் அங்குள்ள டுவின் டவரை தாக்குவது போன்று கண்கவர் மின்னல் தோன்றியுள்ளது. அந்த காட்சி அடங்கிய புகைப்படம் டுவிட்டரில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அது உண்மை நிகழ்வா? அல்லது ஃபோட்டோ ஷாப் செய்யப்பட்டதா? என காண்போரை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அந்த புகைப்படம் உள்ளதாக பலரும் கூறியுள்ளனர். மிதவெப்பமண்டல நாடான மலேசியாவில் இது போன்று மின்னல்கள் தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more