ஆக் ஷன் பிளான் தயார்| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், பிரதமரின் ‘அம்ரித் சரோவர்’ திட்டத்தின் கீழ்புதிதாக 150 அமிர்த நீர்நிலைகளை ஏற்படுத்த, கலெக்டர் தலைமையில் ‘ஆக் ஷன் பிளான்’ தயாராகி வருகிறதுநாட்டில் உள்ள நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ‘அம்ரித் சரோவர்’ என்ற புதிய முயற்சியை கடந்தாண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அமிர்த நீர்நிலைகள்

இதன்படி, விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 50 ஆயிரம் குளங்கள் உருவாக்கப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை இந்த ‘அம்ரித் சரோவர்’ திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இத்திட்டத்திற்கு புதுச் சேரி, காரைக்கால் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளன. இம்மாவட்டங்களில் தலா 75 அமிர்த நீர்நிலைகள் என 150 நீர்நிலைகள் தோற்றுவிக்கப்பட உள்ளது. இதற்கான ‘ஆக் ஷன் பிளான்’ மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமையில் முழு வீச்சில் தற்போது தயாராகி வருகிறது.

திட்டம் எப்படி?

மாவட்டத்தில் அமைய உள்ள ஒவ்வொரு அமிர்த குளமும் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.அதாவது 0.4 ஹெக்டேர் பரப்பளவில் 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் தண்ணீரை சேமித்து வைக்க கூடிய அளவிற்கு இந்த குளங்கள் அமைய உள்ளன. இந்த 150 குளங்கள் மூலம் பல லட்சம் கியூபிக் மீட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.மத்திய அரசின் உத்தரவின்படி, வரும் ஆக., 15ம் தேதிக்குள் 150 அமிர்த குளம் அமைக்கும் பணியை மாநிலத்தில் முடிக்க வேண்டும்.இந்த குறுகிய காலத்திற்குள் 150 குளங்களை ஏற்படுத்த முடியவில்லையெனில், அடுத்தாண்டு ஆக. 15ம் தேதிக்குள் இலக்கு நிர்ணயித்து முடிக்கலாம்.

latest tamil news

புதுசா; பழசா

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளை கண்டறிந்து, புதிதாக அமிர்த குளங்களை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.போதிய இட வசதி இல்லாதபட்சத்தில் புதிய குளங்களுக்கு பதிலாக, ஏற்கனவே புதர்மண்டி கிடக்கும் குளங்களை துார்வாரி, அமிர்த நீர்நிலைகளாக மாற்றலாம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எனவே புதுச்சேரியில் புதிதாக குளங்களை வெட்டலாமா அல்லது ஏற்கனவே உள்ள குளங்களை அமிர்த நீர்நிலையாக மாற்றலாமா அல்லது இரண்டையுமே செய்யலாமா என்று தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.இதுகுறித்து பல்வேறு துறைகளுடன் கலந்துரை யாட அரசு திட்டமிட்டுள்ளது.புதுச்சேரி பிராந்தியத்தில் 5 ஆறுகள் ஓடுகின்றன. 84 ஏரி, குளங்களும் உள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் ஏழு ஆறுகளும் 147 குளங்களும் உள்ளன.
புதிதாக அமைக்கப்பட உள்ள அமிர்த குளங்கள் மூலம் மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.