டாம் க்ரூசின் மிஷன் இம்பாசிபிள் 7 டிரைலர் வெளியானது.. முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜூன் 14ல் வெளியாகிறது..!

ஹாலிவுட்டின் டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஈதான் ஹண்ட் என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் டாம் க்ரூஸ் உயிரை உறைய வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துள்ளார்

கார் சேசிங் காட்சிகள் நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சிகள் என்று அனைத்து வகையான சாகசங்களும் நிரம்பிய இப்படம் டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.

2 பாகங்களாக எடுக்கப்படும் இத் திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டில் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாவது பாகம் 2024 ஆம் ஆண்டில் வெளியாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.