மே 4ல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது. வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி மார்ச் முதல் மே வரை கோடை காலம். இதன்படி … Read more

இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்த … Read more

கற்புக்கரசி என நிரூபி – கற்பூரம் ஏற்றிய கணவரால் மனைவி கை கருகிய பரிதாபம்

கோலார்: கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றினார். ஆனால் அவரது கை கருகிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் … Read more

பொது முடக்கம், கட்டுப்பாடுகளால் சீன மக்கள் அவதி

பீஜிங் : உலகுக்கு கொரோனாவை வாரி வழங்கிய சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தத்தளிக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் அங்கு புதிதாக 7,872 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. ஷாங்காய்க்கு வெளியே சீனாவின் பிரதான பகுதிகளில் 384 பேருக்கு … Read more

அரசுமுறை பயணமாக ஐரோப்பியா நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

டெல்லி : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளில் 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ள நிலையில், ஜெர்மனிக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்

டெல்லி : இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவிப் பொருட்களை வழங்க கடந்த ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இதற்கு அனுமதித்து ஒன்றிய வெளியுறவுத் … Read more

பொள்ளாச்சி: சுற்றுலா சென்ற இருவர் ஆழியாறு அணையில் மூழ்கி உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் குளித்த, கல்லூரி மாணவர் உள்பட இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் பர்னிச்சர் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நண்பர்கள் 7 பேர் ஞாயிறு அன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஆழியார் அணை கட்டு பகுதியில் குளிக்க இறங்கியுள்ளனர். அப்போது கோவை கணபதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்ற அதே பகுதியைச் … Read more

"தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும்”- மத்திய அமைச்சர் தகவல்

`தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப் பொருள்கள் இலங்கையில் வசிக்கும் மக்களுக்கு அனுப்பப்படும்’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் மக்கள், அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவிப்பதால், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் அனுப்ப அனுமதிக்குமாறு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29-ம் … Read more

மைக்கை வீசிய பார்த்திபன்; அதிர்ச்சியான ஏ.ஆர்.ஆர்… `இரவின் நிழல்’ விழாவில் என்ன நடந்தது?

`இரவின் நிழல்’ திரைப்படத்துக்கான இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, முதல் பாடலை வெளியிட்டார். நிகழ்வின்போது பார்த்திபனின் மைக் சரியாக வேலை செய்யாததால் அவர் வேகமாக அதை வீசியெரிந்ததால் நிகழ்வில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியின்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும்.தமிழ் … Read more