உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ரஷ்ய தளபதி: வெளிவரும் பகீர் பின்னணி

வெற்றியை உறுதி செய்ய உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான தளபதி ஒருவர், அவசர அவசரமாக உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான வெற்றியை உறுதி செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் தளபதி Valery Gerasimov. இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் பகுதியில் அமைந்துள்ள Izyum நகரில் குண்டுவெடிப்பில் அவர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் காயமடைந்துள்ள தளபதி Valery Gerasimov உடனடியாக ரஷ்யா திரும்பியதாக … Read more

பாலியல் புகார் எதிரொலி- திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து மலையாள நடிகர் விலகல்

கொச்சி:  மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள, விஜய்பாபு மீது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை குற்றம் சாட்டினார்.  இது தொடர்பாக கொச்சி காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த நிலையில் விஜய்பாபு மீது மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அந்தப் பெண், விஜய்பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர். அதன் … Read more

மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற நாளை வரை காலக்கெடு- ராஜ் தாக்கரே எச்சரிக்கை

அவுரங்காபாத்:  மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: மசூதிகளில் தொந்தரவாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதப் பிரச்சினை அல்ல,  இது ஒரு தேசிய பிரச்சினை.  எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் … Read more

அமைச்சர் முன் பெண் சடலத்தை பரிசோதித்த மருத்துவ அதிகாரி; ‘நடிப்பு’ அம்பலமானதால் மாட்டிக் கொண்டார்.! உத்தரபிரதேசத்தில் வெட்கக்கேடு

சித்ரகூட்: உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்ட மருத்துவமனையை சித்ரகூட் பிரிவின் பாஜக பொறுப்பாளரும், மாநில சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சருமான ஜெய்வீர் சிங் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சர் மருத்துவமனையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ​​சித்ரகூட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பூபேஷ் திரிபாதி, வார்டில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை பரிசோதித்தது மட்டுமல்லாமல், அமைச்சர் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பழங்களையும் கொடுத்தார். இவரது செயலை கண்ட சித்ரகூட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான … Read more

பூட்டப்பட்ட பள்ளி கட்டடத்தில் சந்தேகத்திற்கிடமாக நபர்கள்| Dinamalar

புதுச்சேரி : பூட்டிக்கிடக்கும் பான்சியோனா பள்ளி மாடியில் இளைஞர்கள் சந்தேகத்திடமாக சுற்றி திரியும் வீடியோ வைரலாகி வருகிறது.புதுச்சேரி துாய்மா வீதியில் பழமை வாய்ந்த பான்சியோனா அரசு பெண்கள் பிரஞ்சுப் பள்ளி கட்டடம் உள்ளது. இக்கட்டம் சிதிலமடைந்து பூட்டப்பட்டது.நேற்று இந்த பள்ளி கட்டத்தின் மாடியில் நின்று இளைஞர்கள் சிலர் சந்தேகத்திடமாக திரிந்தனர். உயரத்தில் இருந்தபடியே, பொதுமக்களை நோக்கி கத்தினர். அவர்கள் கஞ்சா போதையில் உள்ளதாக, சமூக வளைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் பரவி … Read more

தெருவுக்கு நடிகர் விவேக் பெயர் சூட்டப்படுகிறது: தமிழக அரசு முடிவு

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். இந்தநிலையில் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த … Read more

சி.ஐ.ஏ., அதிகாரியானார் இந்திய வம்சாவளி| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார். டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தார். ஹார்வார்ட் பல்கலையில் உயர் … Read more

WhatsApp update: இனி ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி ரியாக்‌ஷன் – அசத்தல் அப்டேட்

சமூக வலைதளத்தில் ஸ்டோரி அல்லது ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் விரைவாக பதிலளிக்க முடியும். இந்த வசதி தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது. நீங்கள் பார்க்கும் ஸ்டேட்டஸூக்கு டைப் செய்வதற்கு பதிலாக உடனே லவ், கோபம், சோகம் போன்ற ரியாக்ஷன்களை பதிலாக அனுப்பிட முடியும். உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப் செயலியில் இத்தகைய வசதி இல்லாதது பயனர்களிடம் குறையாகவே இருந்து வந்தது. தற்போது, அதனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் … Read more

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.84 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.52.28 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 … Read more