புடினுக்கு ரகசியமாக 2 மகன்கள்! பிரசவம் பார்த்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ரகசியமாக 2 மகன்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு அவரது ஜிம்னாஸ்ட் காதலி அலினா கபேவா மூலம் இரண்டு ரகசிய மகன்கள் இருப்பதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. முதல் ஆண் குழந்தை 2015-ஆம் ஆண்டு பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் ரகசியமாக பிறந்ததாக அவருக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் கூறியுள்ளார். இரண்டாவது மகன் 2019-ல் மாஸ்கோவில் பிறந்தாகவும், அதே ம்ருத்துவர் ரஷ்யாவிற்கு சென்று பிரசவம் பார்த்ததாக சுவிஸ் … Read more

பெங்களூரில் ட்ரோன்கள் மூலம் ஸ்விக்கி மளிகைப் பொருட்கள் டெலிவரி… இந்த வாரம் துவங்குகிறது கருடா ஏரோஸ்பேஸ்

பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் சேவை நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் பெங்களூரில் ஸ்விக்கி நிறுவனத்திற்கான மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவுள்ளது. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மனிசர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள ட்ரோன் தயாரிப்பு தொழிற்கூடங்களை இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “மே முதல் வாரத்தில் பரீட்சார்த்தமாக தொடங்க உள்ள இந்த திட்டம் ஸ்விக்கி நிறுவனத்தின் முன்னோடி திட்டம்” என்று கருடா … Read more

கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை, கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின்னர் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்தார். பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் … Read more

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகருக்கு 18 ஆண்டு ஜெயில்

திருவனந்தபுரம்: சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பள்ளி, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளது. இங்கு தாளாளராக இருந்தவர் போதகர் தாமஸ் பரேக்குளம் (வயது 35). இவர் கடந்த 2017ம் ஆண்டு இங்கு தங்கியிருந்த 16 வயதான மாணவர்கள் 4 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கொட்டாரக்கரை, புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்திய தண்டனை சட்டம் 377 உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு … Read more

நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது பெருமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதல்வர் பேசி வருகிறார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யப் போருக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி நாளை பயணம்; 65 மணி நேரம், 25 கூட்டங்கள், 8 உலகத் தலைவர்களுடன் சந்திப்பு.!

புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யப் போருக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணமாக செல்கிறார். கிட்டத்தட்ட 65 மணி நேர நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 25 கூட்டங்களில் பங்கேற்கிறார். அப்போது 8 உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்துவரும் நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2ம் தேதி (நாளை) பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நாடுகள் அனைத்தும், ரஷ்யாவுக்கு எதிராக … Read more

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் – அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழு

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் நான்கு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை செயலாளர் நசிமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாயவிலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நான்கு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார் என்றும், … Read more

பாஜகவின் ஆணவத்தை முறியடிக்க ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் வாய்ப்பு கொடுங்கள்: கெஜ்ரிவால்

பாஜகவின் ஆணவத்தை முறியடிக்க ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பருச்சில் இன்று நடைபெற்ற ஆதிவாசி சங்கல்ப் மகாசம்மேளனில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,  “குஜராத் குறித்து  தனது கட்சி கவலைப்படவில்லை என்று பாஜக நபர் ஒருவரே  என்னிடம் கூறினார். குஜராத்தில் உள்ள 6.5 கோடி மக்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். … Read more

நடிகை ஷோபாவின் 42வது நினைவு தினம்

1962ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி கேரளாவில் பிறந்தவர் நடிகை ஷோபா. அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் மகாலக்ஷ்மி மேனன். சினிமாவில் பிரபல நடிகர் பிரேம் நசிர் நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான மலையாள படமான ஜீவித யாத்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஷோபா அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வெறும் 3 வயது தான். குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தபோது ஷோபா என அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து ஏகப்பட்ட மலையாள படங்களில் குழந்தை … Read more