ரஷ்யா உக்ரைன் போர்: 9-வது ஜெனரலை இழந்த புடின்

உக்ரைனில் நடந்த போரில் விலாடிமிர் புடின் தனது ஒன்பதாவது ஜெனரலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே ஆண்ட்ரே (Andrei Simonov) 55, உக்ரைன் நாட்டின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கோவ் (Kharkov) அருகே உள்ள இசியம் (Izyum) என்ற இடத்தில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் ரஷ்யாவின் மிகவும் மரியாதைக்குரிய மின்னணு போர் தளபதி என்று கூறப்படும் ஆண்ட்ரே ஆண்ட்ரே, 2-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தில் (Combined Arms Army) … Read more

கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அரை சதம் – டெல்லி வெற்றிபெற 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது டி காக் 23 ரன்னில் வெளியேறினார். … Read more

சட்டவிரோத நிலக்கரி வர்த்தகம்- போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய நபர் சுட்டுக்கொலை

ஹைலாகண்டி (அசாம்): அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிச் சென்ற நிலக்கரி வியாபாரியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.  சட்டவிரோதமாக  நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக, கரீம்கஞ்ச் மாவட்டம் சதர்கண்டி பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த நபர், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை 11.30 மணியளவில் லாலா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தப்பிச் சென்றுள்ளார்.  இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, லாலா நகரில் இருந்து 10 கிமீ தொலைவில் … Read more

தருமபுரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை: மக்கள் மகிழ்ச்சி

தருமபுரி: தருமபுரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி, அத்தியமான்கோட்டை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து  வெப்பம் தணிந்தது  இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

உதகையில் களைகட்டிய சீசன்; நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்த உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்னர். இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்து இங்கு உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் நீலகிரி … Read more

சோதனை முயற்சியில் தொடங்கியது மெத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை!

மெத்தனால் கலந்த பெட்ரோல் முதல்முறையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது 15% மெத்தனால் கலந்த பெட்ரோல் அசாம் மாநிலம் டின்சுக்கியாவில் உள்ள இந்தியன் ஆயில் பங்க்-களில் விற்கப்பட உள்ளது. சோதனை ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்யா, நிதி ஆயோக் தலைவர் விகே சரஸ்வத் ஆகியோர் தொடங்கிவைத்தனர். `பெட்ரோலுடன் மெத்தனாலை கலந்து பயன்படுத்துவது மூலம் பெட்ரோல் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும். … Read more

சர்க்காரு வாரி பாட்டா புரமோஷனை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் ஆரம்பித்தது முதல் தற்போது வரை ஒரு நடிகையின் அதிக படங்கள் ரிலீசாகி இருக்கிறது என்றால் அது கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்தான். இந்த இரண்டு வருடங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த 6 படங்கள் வெளியாகிவிட்டன. இது தவிர தற்போது இன்னும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் மகேஷ்பாபுவுடன் முதன்முறையாக அவர் இணைந்து நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே … Read more

குஜராத் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடெல்லி, குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று அதன் மாநில நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. 1960-ஆம் ஆண்டு இதே நாளில், முன்னாள் பம்பாய் மாநிலம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது. பம்பாய் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, குஜராத் மற்றும் மராட்டியம் ஆகிய இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;- “குஜராத் மாநிலம் … Read more