122 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் பதிவு

இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு பகுதிகளில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியசாகவும், மத்திய இந்திய பகுதிகளில் 37.78டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது. மேலும், வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மே மாதத்திலும் வழக்கமான வெப்பநிலை இயல்பை … Read more

வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம்

நமது ஆரோக்கியத்தை நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தான் நிர்ணயிக்கிறது. அந்த வகையில், நாம் படுக்கை அறையில் பயன்படுத்த கூடிய பல வித பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்துமாம்.  தலையணை உறை இன்று நாம் பயன்படுத்தும் தலையணை உறையானது முழுக்க முழுக்க வேதி பொருட்கள் நிறைந்த பஞ்சினால் தயாரிக்கின்றனர்.எனவே, தலையணை வாங்கும் போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்த காட்டன் பஞ்சினால் தயாரித்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் படுக்கை அறையில் நீங்கள் … Read more

விலை கடும் வீழ்ச்சி… வெங்காயத்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் விவசாயி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பனப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். தற்போது வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், அறுவடை செய்வதற்கான ஆட்கள் கூலி, சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்குவரத்து செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனது தோட்டத்திற்கு வந்து வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்லுங்கள் என அதிருப்தியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.   அந்த வீடியோவில் பேசிய சிவராஜ், ‘வெங்காயம் விலை வீழ்ச்சி … Read more

காங்கிரசை வலுப்படுத்த பிரியங்காவின் 3 பரிந்துரைகள்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தழுவியது. 1988ம் ஆண்டுவரை அங்கி ஆட்சி செய்த அங்கு கட்சியால் வெறும் 2 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. 2012ல் 28 தொகுதிகளில் வெற்றிபெற்று 11.63 சதவீத ஓட்டுகளை பெற்ற காங்கிரசுக்கு உ.பி. தேர்தலில் தற்போது 2.33 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. அந்த அளவுக்கு காங்கிரசில் பலவீனம் அடைந்து விட்டது. அதில் இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா வீதி வீதியாக … Read more

கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது: போலீஸ் விசாரணை

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டார். கிராம சபை கூட்டத்தின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியில் அடித்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

இந்திய பொருளாதாரம் மீட்சியடைய 12 ஆண்டுகள் ஆகும்: ஆர்.பி.ஐ. ஆய்வுக்குழு அறிக்கை..!

டெல்லி: கொரோனா தொற்று பரவலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம் மீட்ச்சி அடைய குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் நிதி நிலை குறித்த அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ளது. அதில்; 2020- 21 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. என்றும் ஆனால் 2021-22 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் … Read more

மே தினம் விடுமுறை – நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.252 கோடி

இன்று விடுமுறை தினம் என்பதால் டாஸ்மாக்கில் தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகத்தில் விடுமுறை என்பதால் நேற்று கடைகளில் மது பாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் அதிகபட்சமாக மதுரையில் 54 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 52 கோடியே 28 … Read more

“உடல் சரியாக எரியவில்லை” – பிணத்தின் மீது பெட்ரோல் ஊற்றிய உறவினர்களால் ஏற்பட்ட தீ விபத்து

தற்கொலை செய்து கொண்டவரை எரியூட்டும்போது “உடல் சரியாக எரியவில்லை” என்று கூறி பெட்ரோல் ஊற்றிய உறவினர்கள் மீது தீ பரவி 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தடிவாலா பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே. 80 வயதான இவர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலிற்குன் இறுதிச் சடங்குகள் செய்த அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்குள்ள தகன மேடையில் … Read more

நெட் தேர்விற்கு மே 20 வரை அவகாசம்| Dinamalar

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more

சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற ரோஜா

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி தீவிர அரசியலில் இறங்கினார். சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநில நகரி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ.,வாக இருக்கும் ரோஜா, சமீபத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சரான பின் ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து … Read more