”சீனாவில் கொரோனா சமூக பரவல் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” – ஷாங்காய் மாநகர நிர்வாகம்

சீனாவின் ஷாங்காயில் கொரோனா தொற்று பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ள நிலையில், அது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக, ஷாங்காய் மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று தடுப்பு பணியில், கூட்டாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஷாங்காய் நகர நிர்வாகம், அண்மைக்கால தொற்று பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் முதற்கட்ட முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே ஷாங்காயில் ஒரே நாளில் புதிதாக 788 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. Source link

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு

நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரலில் 25 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டியாக 33 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டியாக சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் … Read more

காது பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொலை! மூடப்பட்டிருந்த கண்கள்… உக்ரைனில் சமீபத்திய பயங்கரம்

உக்ரைனில் ரஷ்யா நேற்று நடத்திய நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட கொடூரங்கள் அம்பலமாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நிலையில் நேற்று ரஷ்ய படைகளின் தாக்குதலில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ தரப்பில் கூறும்போது, நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் 17 ராணுவ கட்டமைப்புகள், உயர் துல்லிய ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த … Read more

வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிப்பு

சென்னை: வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.100 அதிகரித்து டெல்லியில் ரூ.2355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. … Read more

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 160 கி.மீ வேகத்தில் செல்லும் 25 புதிய சரக்கு ரெயில்கள்- சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகிறது

புதுடெல்லி: உள்நாட்டு தொழில் நுட்பத்தில் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக சரக்கு ரெயில்கள் இயக்க இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சரக்கு ரெயில்கள் அமைக்கும் சென்னை ஐ.சி.எப்.பில் தற்போது நடைபெற்று வருகிறது. சரக்கு ரெயில்களை புதிதாக தயாரிக்கும் பணியில் ரெயில் பெட்டி தொழிற் சாலை ஈடுபட்டுள்ளது. இந்த சரக்கு ரெயில் 16 பெட்டிகளை கொண்டது. இதில் 2 பெட்டிகளில் குளிரூட்டல் வசதி இருக்கும். … Read more

வழிபாட்டு தலங்களில் 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றம் – உ.பி. அரசு நடவடிக்கை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வைக்கப் பட்டிருந்த 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு உள்ளன என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களிலும் சோதனைகள் … Read more

உக்ரைன் போர்- அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பேர் வெளியேற்றம்

மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது. இன்று அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.  குழந்தைகள் பெண்கள் உட்பட 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் உக்ரைனின் ஜப்போரிஜியா நகரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நம்புவதாகவும் வீடியோவில் பேசிய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஐ.நா. சபையின் திட்டமிடப்பட்ட … Read more

காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கடற்கரை சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து தஞ்சை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாதியும், மதமும் மக்களின் பசி, வேலையின்மையை போக்குமா? தாக்கரேக்களை மறைமுகமாக சாடிய சரத்பவார்

மும்பை: சாதியும், மதமும் மக்களின் பசி, வேலையின்மையை போக்குமா? என்று முதல்வர் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரேக்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மறைமுகமாக சாடி பேசினார். மகாராஷ்டிராவில் அரசியலில் தற்போது அனுமன் சாலிசா விவகாரம் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள மகாராஷ்டிரா நவ் நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஆளும் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மேலும் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி போராட்டங்களை அறிவித்தார். இதுகுறித்து தேசியவாத … Read more

சமஸ்கிருத உறுதிமொழி: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் வெள்ளை அங்கி அணிவித்து இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்க வைப்பது பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் … Read more