சவால்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் – புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே

நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளார். இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லியில் உள்ள தெற்கு பிளாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி … Read more

'வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதம் பாயும்!' – அதிபர் கிம் ஜாங் உன் வார்னிங்!

”வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்” என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஆசியா நாடான வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில் ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, அந்நாட்டு அதிபர் கிம் … Read more

“பீனிக்ஸ் கோஸ்ட் தற்கொலை ட்ரோன்”களை உக்ரைனுக்கு வழங்குகிறது அமெரிக்கா

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சூசைட் ட்ரோன் என்ற அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களை அமெரிக்கா வழங்குகிறது. கிழக்கு உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தம் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா வழங்கும் ட்ரோன்களை அப்பகுதியில் உக்ரைன் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த இவேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் பெயருக்கு ஏற்றார் போல் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என கூறப்படுகிறது. உக்ரைனுக்கு 121 ட்ரோன்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

இந்தியாவின் தேடலில் ஐரோப்பிய நாடுகள் மிக முதன்மையான கூட்டாளிகள் – பிரதமர் மோடி

அமைதி, செழிப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் தேடலில் ஐரோப்பிய நாடுகள் மிக முதன்மையான கூட்டாளிகள் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய பயணத்தையொட்டிப் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், மே இரண்டாம் நாள் ஜெர்மனியின் பெர்லினில் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா – ஜெர்மனி அரசுமுறைப் பேச்சுக்குத் தாம் தலைமையேற்பதாகவும், இதில் இருநாட்டு அமைச்சர்களும் பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளார். மே 3, 4 ஆகிய நாட்களில் டென்மார்க்கின் கோபன்கேகனில் அந்நாட்டுப் பிரதமர் மேத் … Read more

பிரித்தானிய மக்களின் ஆதரவை இழந்த போரிஸ் ஜான்சன்: புதிய ஆய்வு முடிவுகளால் பரபரப்பு!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கெய்ர் ஸ்டார்மருடன் ஒப்பிடுகையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் புகழ் பொதுமக்கள் மத்தியில் சரிந்து இருப்பது பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பிரதமருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு மத்தியில், முன்னாள் கன்சர்வேடிவ் துணைத் தலைவர் லார்ட் ஆஷ்கிராஃப்ட் நடத்திய ஆய்வு முடிவுகள் இன்று Mail செய்திதளத்தில் வெளியானது. இதில், தொழிலாளர் கட்சியின் பிரதிநிதி கெய்ர் ஸ்டார்மருடன் ஒப்பிடுகையில் பழமைவாத கட்சியின் பிரதிநிதி மற்றும் பிரித்தானிய பிரதமருமான போரிஸ் ஜான்சனின் … Read more

பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ வேகமாகப் பரவியது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில், 100க்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 12 தீயணைப்பு வாகனங்கள், 2 ஸ்கைலிப்ட் வாகனங்கள் மூலம் 90 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் … Read more

சிவகளை கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி எம்.பி.- கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு

செய்துங்கநல்லூர்: மே தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். முன்னதாக அவர் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை பார்வையிட்டார். பின்னர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: இன்று உழைப்பாளர்களுக்கான தினம். பெண்களுடைய உழைப்பு இல்லையென்றால் சமுதாயம் எந்தவித … Read more

கேள்வித் தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுங்கள்- குஜராத் முதல்வருக்கு கெஜ்ரிவால் சவால்

டெல்லி முதல்வரும், ஆம் அத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- குஜராத்தில் 6000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல பள்ளிகள் பாழடைந்த நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் சீர்குலைந்துள்ளது. டெல்லியில் பள்ளிகளை மாற்றும் விதத்தில் குஜராத்தின் எதிர்காலத்தை மாற்றலாம். குஜராத்தில் தேர்வின்போது கேள்வி தாள் கசிந்ததில் பாஜக உலக சாதனை படைத்து வருகிறது. கேள்வி தாள் கசிவு … Read more

அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மிசிசிபி: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.     இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மிசிசிபி நகரில் … Read more

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முதல்வர் தொடர்ந்து எடுத்து வருகிறார்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை; நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முதல்வர் தொடர்ந்து எடுத்து வருகிறார் என  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எளிய மக்களின் கல்விக்காக நான் குரல் கொடுப்பேன்; ஆளுநர் எத்தனை முறை முட்டுக்கட்டை போட்டாலும் நீட் ரத்துக்கான முயற்சிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.