Month: May 2022
ஓடிடிக்கு வந்த ஆர்ஆர்ஆர் : மே 20ல் வெளிவருகிறது
பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் நடித்த படம் ஆர்ஆர்ஆர். கடந்த மார்ச் 25ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. பாகுபலி அளவிற்கு படம் பேசப்படவில்லை என்றாலும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்திற்கு வந்துள்ளது. வருகிற … Read more
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி தப்பி சென்ற இளைஞர்.. சாமியார் வேடத்தில் இருந்தவனை தட்டி தூக்கிய காவல்துறையினர்..!
இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு திருவண்ணாமலையில் சாமியார் வேடம் அடைந்து மனிதன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை அந்த பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுக்கவே திருமணம் செய்யவில்லை என்றால் ஆசிட் அடித்து விடுவேன் எனவும் நாகேஷ் மிரட்டியுள்ளார். ஆனால் … Read more
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தமிழக சூழல் குறித்து மத்திய அரசிடம் விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அரசு விழாக்களிலும் வெளிப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இந்தி திணிப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more
உங்கள் கை, கால் கருப்பா இருக்கா? இதனை போக்க இதோ சூப்பர் 10 டிப்ஸ்!
பொதுவாக முகம் போன்றே கைகளும், கால்களும் கூட சூரியனின் நேரடி புற ஊதாக் கதிர்களை பாதிக்கின்றன. இது நேரடியாக வெளிப்படும் போது மெலனின் உற்பத்தியில் அதிகரிப்பு இருக்கும். இது இருண்ட நிறத்தை உண்டாக்கும். முகத்தை காட்டிலும் கைகளும் கால்களும் கருப்பாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நல்ல பிஞ்சு வெள்ளரிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வர … Read more
லைவ் அப்டேட்ஸ்: நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்திற்கு, ரஷியா மிரட்டல்
15.05.2022 03.50: நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை பின்லாந்து பின்பற்றினால், ரஷியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று, அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரித்துள்ளார். பின்லாந்து தனது பாரம்பரியமான ராணுவ நடுநிலை என்ற கொள்கையை கைவிட்டு விட்டதாகவும், இது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார். 01.30: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். தலைநகர் கீவ்வில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப் … Read more
காரில் கடத்திய 250 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்
திருவொற்றியூர்: செங்குன்றம் ஆலமரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் 5 அடி நீளம் கொண்ட 250 கிலோ எடையுள்ள 5 செம்மரக்கடைகள் இருந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் சிவசங்கரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருச்சி அருண்குமார்(29), செங்குன்றம் சரவணன் (எ) அர்னால்ட் சரவணன்(34), வியாசர்பாடி மோகன்(61), அண்ணனூர் ஜமால் (எ) அசேன் மொய்தீன்(34), கும்மிடிப்பூண்டி ரமேஷ்(46), இப்ராஹீம் ஷா(44), சிவசங்கர்(24), இப்ராஹிம்(56), பி.வி.காலனி சங்கர்(39) ஆகியோரை … Read more
பள்ளி மாணவி பலாத்காரம் ஆசிரியராக பணியாற்றிய மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்ததாக புகார்
திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரத்தில் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், சிபிஎம் கவுன்சிலருமான சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர் சசிகுமார் பணியில் … Read more
விஜய் 66 : மனோபாலா வெளியிட்ட மறுப்பு செய்தி
இயக்குனர் மனோபாலா பல படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது சரத்குமார், தயாரிப்பாளர்கள் தேனப்பனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் சரத்குமாரும், தேனப்பனின் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் மனோபாலா சாதாரண உடையில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் வெளியானதையடுத்து விஜய்யின் 66வது படத்தில் சரத்குமாரும் தேனப்பனும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக ஒரு செய்தி பரவ தொடங்கியது. அதையடுத்து உடனடியாக இந்த தகவலை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா. அதில் சரத்குமார், தயாரிப்பாளர் … Read more