டெல்லி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்வு

புதுடெல்லி: டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடடத்தில் நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்று வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்தனர். இந்த … Read more

ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திருப்பு

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நேற்று முன்தினம் 62 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 32 ஆயிரத்து 303 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹4.03 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் காத்திருக்கின்றனர். இவர்கள் 7 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் மற்றும் ஆந்திர … Read more

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனாவுக்குப் பின்னர் சபரிமலையில் நடைதிறக்கும் நாளன்று பக்தர்கள் தரிசனம் செய்ய இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நேற்று முதல் நடை திறந்த அன்றே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். … Read more

விபத்தில் இறப்பவர்களின் குடும்பங்களிடம் மோசடி-சாலை விபத்தில் சிக்கிய போலி வருவாய் ஆய்வாளர்

தன்னை வருவாய் ஆய்வாளர் எனக்கூறி விபத்துக்குள்ளானவர்களின் குடும்பத்தை ஏமாற்றி பணம் பறித்து வந்த மோசடி நபர் ஒரு விபத்தினால் போலீஸில் சிக்கிய சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.  சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து காப்பீடு தொகையை பெற்றுத்தருவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்மீது சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சேலத்தில் வருவாய் … Read more

டில்லி தீ விபத்தில் 29 பேர் மாயம் பலி உயரக்கூடும் என அச்சம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-டில்லியில், வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 27 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், 29 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள நான்கு மாடி வணிக வளாகத்தில், நேற்று முன்தினம், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ … Read more

மீண்டும் நயன்தாராவுக்காக கதை எழுதும் நடிகர்

கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான படம் லவ் ஆக்சன் டிராமா. நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த இந்த படத்தை இளம் நடிகர் தயன் சீனிவாசன் என்பவர் இயக்கியிருந்தார். பிரபல நடிகர் சீனிவாசனின் மகன்.. இளம் இயக்குனர் வினித் சீனிவாசன் தம்பி என்பதை பலர் அறிந்திருக்கலாம்.. முதல் படத்திலேயே நயன்தாராவை வைத்து இயக்கிய தயன் சீனிவாசன் தற்போது படங்களில் நடித்துக் கொண்டே அடுத்த படத்தை இயக்குவதற்காக கதையை தயார் செய்து வருகிறாராம். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறும்போது … Read more

நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!!

காத்மாண்டு,  அரசாங்கம் நடத்தும் எரிபொருள் விநியோக நிறுவனமான நேபாள ஆயில் கார்ப்பரேஷன், பெட்ரோலியப் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. சமீப காலமாக, ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் எரிபொருள் விலையை மாநகராட்சி உயர்த்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் காரணமாக இம்முறை அதிகரிப்பு தாமதமாகி இருந்தது.  இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளம் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் … Read more

ஐபிஎல் : ஆண்ட்ரே ரசல் அதிரடி : கொல்கத்தா அணி 177 ரன்கள் குவிப்பு

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது . தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் ,ரகானே களமிறங்கினர் .தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த நிதிஷ் ராணா ரஹானேயுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார் . இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் … Read more

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றது முதல் அந்த நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால் அதை மறுக்கும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மசூதியில் குண்டு வெடித்தது குறிப்பாக ஷியா பிரிவு … Read more