இலங்கையில் 4 மந்திரிகள் பதவியேற்பு – பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் அதிபர்

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்துவந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ம் தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார். பேச்சுவார்த்தை … Read more

அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 மாதத்தில் 6.18 லட்சம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்தில் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தின் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தின் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. 6.05 லட்சம் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவு கழகத்தில் வழங்க தெலுகானாவுக்கு அனுமதி அளித்தது. புழுங்கல் அரிசி கொள்முதல் கோரி டெல்லியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போராட்டம் நடத்தினார். 

"எங்கள் மகளை அடித்துக் கொன்றுவிட்டார்" – திருமணமான 3 வருடத்தில் பெண் மரணம்!

ஆரணியில் இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் பகுதி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி. இவருடைய மகள் சரண்யா (23) என்பவருக்கும், ஆரணி டவுன் ஜிம் மாஸ்டர் அமரேசன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக நேற்றிரவு சரண்யா … Read more

தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? – வெளியான தகவல்

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராஜ்ய சபா எம்பியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவரான பிரகாஷ்ராஜ், கன்னட திரையுலகு மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். நடிப்புத் திறமையில் தனித்துவமான நடிப்பின் மூலம், மொழிகளைக் கடந்து ரசிகர்களை கொண்டவர் பிரகாஷ் ராஜ். இவரின் தோழியும், பிரபல பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ், கடந்த 2017-ம் … Read more

சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்வேதா கெல்கே

வானத்தை போல சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தவர் ஸ்வேதா கெல்கே. பெங்களூரை சேர்ந்த ஸ்வேதா ஐடி துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அதன்பின் சினிமா துறையில் கால்பதித்த அவர், சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், திடீரென வானத்தை போல சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் புரியாத நிலையில் ஸ்வேதாவை இனி பார்க்கவே முடியாதா? என ரசிகர்கள் வருந்தமடைந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்வேதா கெல்கே தமிழ் சின்னத்திரையில் புது … Read more

23 வயதில் 100 கோடி சம்பாதித்த ஹைதராபாத் இளைஞன்..!!

இன்றைய வேகமாக இயங்கும் உலகில் தொழில்நுட்ப உதவியுடன் சரியான ஐடியா இருந்தால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணத்தைக் கொட்ட பல லட்சம் முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில் 23 வயது இளைஞன் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு துவங்கு நிறுவனத்தின் மூலம் சுமார் 100 கோடி ரூபாய்ச் சம்பாதித்துள்ளார் சங்கர்ஷ் சந்தா. மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா செல்கிறீர்களா? உஷார்.. உங்கள் விசா ரத்தாகலாம்..! சங்கர்ஷ் சந்தா ஹைதராபாத்தில் உள்ள ஸ்லேட் – … Read more

'நிலைமை இன்னும் மோசமாகும்': இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்கிரமசிங்க

இலங்கை நெருக்கடி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மேம்படுவதற்கு முன்னர், தற்போது இருக்கும் நிலையை விட இன்னும் மோசமாகும் என இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார். இலங்கையில் நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இலங்கையில் வாழ்வது கடினம் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் பலருக்கு உணவைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more