தனியார் திருமண மண்டபம் லிஃப்ட் விபத்து- 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையும் படியுங்கள்.. பக்தர்கள் வருகை … Read more

குப்பை மேட்டில் குண்டுவெடித்து 17 வயது சிறுவன் பலி

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் குப்பைக் கிடங்கில் குண்டு வெடித்ததில் 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  கொல்கத்தாவில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள அஜம்தலா என்ற இடத்தில் உள்ள குப்பைக் கிடங்கில், இன்று காலை ஊழியர் ஒருவர் குப்பை மேட்டை அகற்றியபோது ஒரு பாக்சை கண்டெடுத்தார். அப்போது அவரது 17 வயது மகன் ஷேக் சலீம், அந்த பாக்சை வாங்கி அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது வீசி … Read more

நேட்டோ அணு ஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால் கடும் விளைவு ஏற்படும்- ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 80 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படையெடுப்பிற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதால் அஞ்சிய  ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பாதுகாப்புக்காக நேட்டோவில் இணையப்போவதாக கூறி வருகின்றன. இரண்டு நாடுகளும் ஓரிரு வாரங்களில் நேட்டோவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு ரஷியா மூலம்  ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் நேட்டோ படைகள் ஓர் ஆண்டுகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க … Read more

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது சென்னை உய்ரநீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த சென்னை உய்ரநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வரும் 22-ல் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக கபடி வீரர் திருவேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். கபடி பற்றி போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் 10 ஆண்டுக்கும் மேல் தலைவர், செயலாளர் பதவியில் இருக்கின்றனர் என அதில் தெரிவித்தார்.

பள்ளி மாணவி பலாத்காரம் ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது: 100 மாணவிகளை சீரழித்ததாக புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார்(57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இவர் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆசிரியர் சசிகுமார் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் … Read more

பட்டியில் அடைத்திருந்த 27 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் குதறிய தெருநாய்கள்

பட்டியில் அடைத்திருந்த 27 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் பரிதாபமாக அவை உயிரிழந்தன. தேனி மாவட்டம் தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜய்யா (52) மற்றும் அவரது மகன் பகவதி குமார் (30) ஆகிய இருவரும் சுமார் 150 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் தம்மிநாயக்கன்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான முருங்கை தோட்டத்தில், கிடை போடுவதற்காக 30 ஆட்டுக் குட்டிகளை விட்டு விட்டு மற்ற பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து முருங்கை … Read more

கன்னித்தீவை புறக்கணித்த 3 ஹீரோயின்கள்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில் சுந்தர் பாலு தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய ஹீரோயின். அவருடன் ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகியார் நடித்துள்ளர். … Read more

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை.. எங்கு, எப்போது. தொடங்கப்படும்?

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப்ஸ் தொழிற்சாலையை அமைக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவை வெற்றியடைந்தால் இந்த அண்டின் இறுதிக்குள் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப்ஸ் தொழிற்சாலை தொடங்கப்படும். சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அசோக் லேலண்ட்.. மாபெரும் EV தொழிற்சாலை..! எங்கு? தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் (TSMC), டாடா குழுமம், வேதாந்தா -ஃபாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, … Read more

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று (13) முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட நாடுகளில் உணவு பாதுகாப்புக்காக கோதுமை அனுப்ப மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் … Read more