ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:உரிய டிக்கெட்டுகள் வைத்திருந்தும், பயணியரை ஏற்க மறுத்ததற்காகவும், பயணியருக்கு இழப்பீடு வழங்காததற்காகவும், ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்துக்கு, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.

இது பற்றி, டி.ஜி.சி.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெங்களூர், ஹைதராபாத், புதுடில்லி ஆகிய இடங்களில், டி.ஜி.சி.ஏ., ஆய்வு மேற்கொண்டது. அப்போது, ஏர் – இந்தியா நிறுவனம், விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டது. உரிய டிக்கெட்டுகள் வைத்திருந்த பயணியரை, விமானங்களில் ஏற்ற, ஏர் – இந்தியா மறுத்துள்ளதும், பயணியருக்கு இழப்பீடு வழங்காததும் தெரிய வந்தது.இது பற்றி, ஏர் – இந்தியாவிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. நேரடியாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

latest tamil news

பயணியருக்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்த கொள்கையும் கடைப்பிடிக்கப்படவில்லை என, ஏர் – இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.