புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ‛ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ குழுமத் தலைவராக உள்ளார். இவரின் ஜியோ நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜியோ நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து அவர் நேற்று (ஜூன் 27) ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஜியோவின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பங்கஜ் மோகன் பவார் ஜூன் 27 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கவும், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை இயக்குநராக நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகாஷ் அம்பானி நியமனம் குறித்து பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.