கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழக அரசு புறக்கணிப்பு

சென்னை: குஜராத்தில் நடைபெறும் இரண்டு நாள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு குஜராத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கல்வி … Read more

2020-21-ல் பாஜகவுக்கு ரூ.477 கோடி நன்கொடை – காங்கிரஸூக்கு ரூ.74 கோடி

புதுடெல்லி: கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ஆளும் பாஜக ரூ.477.54 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுமார் ரூ.74.50 கோடி மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேர்தல் சட்ட விதிகளின்படி அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி பாஜகவும் காங்கிர ஸும் 2020-21-ம் நிதியாண்டில் தாங்கள் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. இதனை பொதுமக்களின் பார்வைக்கு தேர்தல் ஆணையம் நேற்று … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.   2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது. துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன், அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார். அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார். Source … Read more

ராமர் கோவில் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

அயோத்தியில் ராமர் கோவில் கருவறை கட்டுவதற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடக்கி வைத்தார். துறவிகள், மடாதிபதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராமர் கோவில் கருவறை கட்டுவதற்கு ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டினார். 2023ஆம் ஆண்டுக்குள் கருவறையும், 2024ஆம் ஆண்டுக்குள் கோவிலும் கட்டி முடிக்கப்படும் என்று கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவில் வளாகத்தில் உள்ள முதன்மையான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவுடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். Source … Read more

இசை அல்லது இளையராஜா

இளையராஜாவைப் பேசுவதும் இளையராஜாவின் இசையைப் பற்றிப் பேசுவதும் ஒன்றல்ல. ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படிப் பேசப்பட வேண்டியவராக அவர் ஆகியிருக்கிறார். இசையைப் பிரித்துவிட்டு இளையராஜாவையோ, இளையராஜாவைப் பிரித்துவிட்டு இசையையோ பேசமுடியாத அல்லது பேச விரும்பாத தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். Yugabharathi talked about Musical director Ilaiyaraaja 1976-வது ஆண்டில் வெளிவந்த  ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். அதே ஆண்டில்தான் நானும் பிறந்திருக்கிறேன். அதுவே அவரையும் அவருடைய இசையையும் புரிந்துகொள்ள ஏதுவாகிறது. ஸ்தூல இசையின் சூட்சுமங்களை … Read more

மனைவியை அவதூறாக பேசிய உறவினர்கள்.. தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கதி!

சென்னையில் மனைவியை அவதூறாக பேசியவர்களை தட்டிக்கேட்ட கணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(34). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், அவரது சகோதரர் செந்தில் நேற்று மதியம் மோகனை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். … Read more

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 103 சதவீதமாக இருக்கும்! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 103 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைத்தான் இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பியிருக்கின்றனர். இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்பே,  முன்கூட்டியே தொடங்கிவிட்டது. கேரளாவில் கடந்த 3 … Read more

செல்லப்பிராணிகளுக்கும் ‘காப்பீடு’ செய்யலாம்

சென்னை: மனிதர்களை போலவே செல்ல பிராணிகளுக்கும் காப்பீட்டு திட்டங்கள் இருக்கிறது. ஆனால் சிலர் அவற்றை உபயோகப்படுத்துவதில்லை. அதன் பயன் தெரியாமல் தங்களுடைய செல்ல பிராணிகளுக்காக அதிகம் செலவிடுகிறார்கள். உங்களுடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம் அதற்கான தொகையை பெற முடியும். ஆபத்தான நோய்களால் இறந்தாலும் காப்பீடு தொகையை பெறலாம். செல்ல பிராணிகளின் இனம், அளவு, … Read more

தென்மேற்கு பருவ மழை 103 சதவீதமாக இருக்கும்- இந்திய வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி அன்று தொடங்கும். ஆனால் 3 தினங்களுக்கு முன்னதாக கடந்த 29-ந்தேதி அன்றே கேரளாவில் பருவ மழை தொடங்கி விட்டது. நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா கூறியதாவது:- தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் … Read more

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் … Read more