பாகிஸ்தானில் கன மழை: 320 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி : பாகிஸ்தானில் பெய்த கன மழையால், பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுதும் பரவலாக கன மழை கொட்டுவதால், இது வரை 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 குழந்தைகள், 32 … Read more

ஹோட்டல்களில் சேவை கட்டணத்துக்கு தடை – 1915 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

ஹோட்டல்கள், உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரிவு 18(2)(1)-ன் கீழ் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்டணத்தை சேர்க்கக் கூடாது. ஹோட்டல்களில் நுகர்வோரிடம் சேவைக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. உணவுக் கட்டணத்துடன் … Read more

Infinix: ஆகஸ்ட் 2 அன்று வெளியாகும் இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

Infinix Hot 12 Pro Flipkart: இன்பினிக்ஸ் புதிய போனை ஆகஸ்ட் 2 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் “இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ” வெளியீடு குறித்த மைக்ரோ தளத்தை பிளிப்கார்ட் திறந்துள்ளது. அதில் போனை குறித்த சில தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த போனை #ProMultitasker என்று குறிப்பிடுகிறது. இந்த போனில் இரண்டு கேமராக்கள், எச்டி+ டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, நீட்டிக்கக்கூடிய ரேம் அம்சம் போன்ற … Read more

நாடு முழுவதும் கடந்தாண்டில் 21 நாள் மட்டுமே நடந்த சட்டப்பேரவை கூட்டம்: 500 மசோதாக்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் சராசரியாக 21 நாள்கள் மட்டுமே கூடி உள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநில சட்டபேரவைகளின் செயல்பாடுகள் குறித்து, ‘பிஆர்எஸ் லெஜிஸ்லேட்டிவ்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:* கடந்தாண்டில் மாநில சட்டப்பேரவைகள் சராசரியாக 21 நாட்கள் மட்டுமே கூடியுள்ளன. இதில், உயர்க் கல்வி, ஆன்லைன் விளையாட்டு, மத மாற்றம், கால்நடைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட … Read more

தனக்குச் சொந்தமான வீட்டை நடிகருக்கு விற்ற ஜான்வி கபூர்

ஹிந்தி திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவரும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னும் மிகப் பெரிய வெற்றியை ஜான்வி அடையவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமாகவே உள்ளார். ஜான்வி கபூர் 2020ம் ஆண்டில் மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் மூன்று தளங்களைக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை 39 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆடம்பரமான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 6 கார்களை நிறுத்தும் வசதி கொண்ட அந்த வீட்டைத் தற்போது … Read more

பளுதூக்குதலில் தங்கம் வென்றார் அசின்டா சியுலி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இது 3வது தங்கப் பதக்கம். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ … Read more

சரத்குமாருக்கு சமூக அக்கறை வேண்டாமா? நெட்டிசன்ஸ் கொதிப்பு

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்துகொண்டதால், அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்த சிலர், நெருக்கடிக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைன் ரம்மியால் அதிகரித்து வரும் தற்கொலைகளால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள், … Read more

திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நர்சிங் மாணவி, விடுதியில் தற்கொலை செய்துகெண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே விடுதியுடன் கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில்,ஈரோட்டைச் சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு நர்சிங்க படித்து வந்தார். இந்நிலையில், நேற்று அந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று பகல் வழக்கம்போல், அனைத்து மாணவிகளும் உணவருந்த சென்றபோது, மேலே உள்ள அறைக்கு சென்ற … Read more