மோடி அரசு அறிவிப்பால் கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்கள் கொண்டாட்டம்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூன் மாதம் 25.63 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 9.61 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசம் தான்.

இந்தியாவில் இறக்குமதி பொருட்களில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் விதமாகவும், ரூபாய் மதிப்பின் தொடர் சரிவை காப்பாற்றவும் புதிய வரி சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு.

மோடி அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்களைத் தாண்டி சாமானிய மக்களுக்கும் அதிகப்படியான நன்மை கிடைக்க உள்ளது.

காற்றில் இருந்து தண்ணீர்.. லிட்டர் வெறும் 4 ரூபாய் தான்.. அசத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..!

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 12 சதவீதம், 15 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும், 20 சதவீதம் கலந்த டீசலுக்கும் உரிய சதவீதத்தில் கலால் வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறையும்.

எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல்

எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல்

இந்தியாவில் நீண்ட காலமாக எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல்-ஐ பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், மத்திய அரசின் கூடுதலான கலால் வரிச் சலுகை பெரிய அளவில் நன்மை அளிக்க உள்ளது.

அக்டோபர் 1
 

அக்டோபர் 1

இதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் எத்தனால் உடன் கலப்படம் செய்யப்படாத பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டதால் அதற்கு மத்திய அரசு கூடுதலாக 2 ரூபாய் கலால் வரியை ஒரு லிட்டருக்கு வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

எத்தனால் நிச்சயம்

எத்தனால் நிச்சயம்

எத்தனால் கலக்காமல் விற்பனை செய்தால் கூடுதலாக 2 ரூபாய் வரி, கலந்து விற்பனை செய்தால் வரிச் சலுகை. இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் வரிச் சலுகை பெறவே திட்டமிடுவார்கள். சரி இந்த வரிச் சலுகை எப்படிக் கணக்கிடப்படும்.

வரி கணக்கீடு

வரி கணக்கீடு

நீங்க 15 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், பெட்ரோலுக்கான கலால் வரியில் 85 சதவீதம் மட்டுமே கணக்கிடப்படும், 15 சதவீத வரி எத்தனால் விலையில் மாநில அரசின் வரி தான் கணக்கிடப்படும். இதனால் பெட்ரோல் மீதான வரி அளவு குறையும்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இதுவரை மத்திய அரசு 10 சதவீதம் வரையில் மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பெட்ரோலுக்கு 12- 15 சதவீதம் வரையிலும், டீசலுக்கு 20 சதவீதம் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு நன்மை

இரண்டு நன்மை

மத்திய அரசின் இந்த வரி சலுகையால் இரண்டு நன்மைகள் உண்டு.

1. மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதிக்குச் செலவு செய்யும் தொகையைக் குறைத்து ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.

2. எத்தனால் பயன்படுத்தப்படுவதால் கருப்பு விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியம் மீதான அரசின் சுமை குறையும்.

கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்கள்

கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்கள்

எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்கள் அதிகப்படியான வருமானம், லாபத்தைப் பெற முடியும்.

தமிழ்நாட்டில் 3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. எந்த மாவட்டத்துக்கு ஜாக்பாட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Good news: Excise duty concession on ethanol blended petrol, diesel; no green tax from October 1

Good news: Excise duty concession on ethanol blended petrol, diesel; no green tax from October 1 மோடி அரசு அறிவிப்பால் கச்சா எண்ணெய், சர்க்கரை நிறுவனங்கள் கொண்டாட்டம்.. ஏன் தெரியுமா..?

Story first published: Tuesday, July 5, 2022, 18:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.