குந்தவையாக த்ரிஷா : வெள்ளியன்று பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது. முதல்பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளதாக கூறி அவர்களின் போஸ்டர்களை வெளியிட்டனர். இன்று(ஜூலை 7) திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் போஸ்டர் நாளை வெளியாகும் என தெரிகிறது.

இதனிடையே நாளை(ஜூலை 8) மாலை பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி டீசரை அமிதாப் பச்சனும், மலையாள டீசரை மோகன்லாலும் வெளியிட உள்ளனர். பொன்னியின் செல்வன் படம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.