இந்தியன் டிரைவிங் லைசென்ஸ் இருக்குதா? இந்த 21 நாடுகளில் வண்டி ஓட்டலாம்!

இந்தியாவில் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ் இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்

ஆனால் இந்தியாவின் டிரைவிங் லைசென்ஸ் 21 நாடுகளின் செல்லுபடி ஆகும் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும். ஒரு சில நாடுகளில் இந்திய டிரைவிங் லைசென்ஸ் அனுமதிக்கப்படாது என்றாலும் கீழ்கண்ட 21 நாடுகளில் நீங்கள் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் வண்டி ஓட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த 21 நாடுகள் என்னென்னெ என்பது குறித்து தற்போது பார்ப்போம்

1. ஜெர்மனி

ஜெர்மனியில், இந்திய டிரைவிங் உரிமத்தில் ஆறு மாத காலத்திற்கு வாகனம் ஓட்டலாம். ஆனால் உங்கள் உரிமத்தின் ஜெர்மன் அல்லது ஆங்கில நகலைப் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

 2. பிரிட்டன்

2. பிரிட்டன்

பிரிட்டனில் நீங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ஒரு வருடம் வண்டி ஓட்டலாம். உண்மையில் நீங்கள் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய மூன்று நாடுகளிலும் வாகனம் ஓட்டலாம்.

3. ஆஸ்திரேலியா
 

3. ஆஸ்திரேலியா

இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட ஆஸ்திரேலியா உங்களை அனுமதிக்கிறது. ஆனால் செல்லுபடியாகும் காலம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே. உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். மேலும், இந்தியாவில் வாகனம் ஓட்டுவது போல் ஆஸ்திரேலியாவிலும் சாலையின் இடதுபுறத்தில் ஓட்டுகிறீர்கள்.

4. நியூசிலாந்து

4. நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டுக்கு வருபவர்கள் தங்கள் சொந்த நாட்டின் ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடத்திற்கு ஓட்ட நியூசிலாந்து அரசு அனுமதிக்கிறது.

5. சுவிட்சர்லாந்து

5. சுவிட்சர்லாந்து

இந்தியர்கள் உள்பட அந்தந்த நாடுகளின் ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடத்திற்கு அழகிய கிராமப்புறங்களில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய ஓட்டுநர் உரிமத்தின் ஆங்கில நகல் உங்களிடம் இருந்தால், சுவிட்சர்லாந்தில் வாடகை கார் ஓட்டுவது சாத்தியமாகும்.

6. தென்னாப்பிரிக்கா

6. தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் அழகான நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை உங்களின் இந்திய டிரைவிங் லைசென்ஸ் மூலம் சுற்றிப் பார்க்கலாம். உங்கள் டிரைவிங் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருப்பதையும், உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் வைத்திருப்பதை உறுதிசெய்வதே முக்கியமானது.

7. ஸ்வீடன்

7. ஸ்வீடன்

ஸ்வீடனில் கார் ஓட்ட, உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம், ஸ்வீடிஷ், ஜெர்மன், பிரஞ்சு அல்லது நார்வேஜியன் ஆகிய மொழிகளில் இருக்க வேண்டும்.

8. சிங்கப்பூர்

8. சிங்கப்பூர்

இந்த நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ஓராண்டுக்கு நாடு முழுவதும் வண்டி ஓட்ட அனுமதிக்கின்றது.

9. ஹாங்காங்

9. ஹாங்காங்

இந்திய ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடத்திற்கு ஹாங்காங்கில் சட்டப்பூர்வமாக காரை ஓட்டலாம்.

10. மலேசியா

10. மலேசியா

மலேசிய சாலைகளில் ஓட்டுவதற்கு, உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் இருக்க வேண்டும். இந்த ஆவணம் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தால் சரிபார்க்கப்பட வேண்டும்.

11. அமெரிக்கா

11. அமெரிக்கா

இந்தியன் டிரைவிங் லைசென்ஸ் அமெரிக்காவிலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் உங்கள் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் இந்திய லைசென்ஸை வைத்து நீங்கள் ஒரு வருடம் இங்கு ஓட்டலாம்.

12. பிரான்ஸ்

12. பிரான்ஸ்

வெளிநாட்டினர் தங்கள் உள்ளூர் ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடத்திற்கு வாகனம் ஓட்டுவதற்கு நாடு அனுமதிக்கிறது. ஆனால் அவர்கள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் லைசென்ஸை வைத்திருக்க வேண்டும்.

13. ஸ்பெயின்

13. ஸ்பெயின்

ஸ்பெயினின் கலாச்சார பாரம்பரியத்தை சுற்றி பார்க்க ஒரு காரை வாடகைக்கு எடுத்து இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி ஓட்டலாம்.

14. பூட்டான்

14. பூட்டான்

அமைதியை விரும்பும் நாடு உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட உங்களை அனுமதிக்கிறது.

15. பின்லாந்து

15. பின்லாந்து

ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ முழுவதும் சுற்றி வரலாம். ஆனால் இங்கே ஒரு கட்டாயத் தேவை என்னவென்றால், நீங்கள் உடல்நல காப்பீட்டை பெற வேண்டும்.

16. மொரிஷியஸ்

16. மொரிஷியஸ்

இந்த அழகான தீவில் சுற்றித் திரிவதற்கு போதுமான நேரம் இருப்பதால், இந்திய உரிமத்துடன் வாகனம் ஓட்டுவதற்கு இந்த நாட்டில் 1 நாள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

17. இத்தாலி

17. இத்தாலி

நீங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் இத்தாலியில் வாகனம் ஓட்டலாம் ஆனால் அது ஒரு சர்வதேச ஓட்டுநர் அனுமதியுடன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

18. அயர்லாந்து

18. அயர்லாந்து

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது EEA நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை அயர்லாந்து ஏற்றுக்கொள்கிறது.

19. நார்வே

19. நார்வே

வடக்கு விளக்குகளின் நிலம் என்று அழைக்கப்படும் நார்வே நாட்டில் இந்திய ஓட்டுனர் லைசென்ஸை வைத்து நாடு முழுவதும் பயணம் செய்ய மூன்று மாதங்கள் வரை அனுமதிக்கின்றது.

20. ஐஸ்லாந்து

20. ஐஸ்லாந்து

கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் வழங்கப்படும் சர்வதேச உரிமத்துடன் வாடகை வாகனங்களில் பயணிக்க ஐஸ்லாந்து அனுமதிக்கிறது. இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

21. கனடா

21. கனடா

கனடாவிலும் இந்திய ஓட்டுனர் லைசென்ஸ் செல்லுபடியாகும். கனடாவின் கரடுமுரடான நிலப்பரப்பை காண சாலைப் பயணம் சிறந்த வழியாக இருக்கலாம். மறக்க முடியாத நினைவுகளுடன் மீண்டும் வருவீர்கள். இந்தியாவில் ஓட்டுவது போலல்லாமல், சாலையின் வலது பக்கத்தில் வாகனம் ஓட்டுவதை உறுதிசெய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These 21 Foreign Countries Allow You To Drive With An Indian Driving Licence

These 21 Foreign Countries Allow You To Drive With An Indian Driving Licence | இந்தியன் டிரைவிங் லைசென்ஸ் இருக்குதா? இந்த 21 நாடுகளில் வண்டி ஓட்டலாம்!

Story first published: Tuesday, July 26, 2022, 8:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.