பிரித்தானிய பிரதமர் தேர்தல் விவாதம் திடீர் நிறுத்தம்: நேரலையில் மக்களை அதிர்ச்சியடையவைத்த சம்பவம்

பிரித்தானியா அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கும் நிலையில், எதிர்பாராத அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்றின் காரணமாக வேட்பாளர்களுக்கிடையிலான விவாதம் திடீரென நிறுத்தப்பட்டது.

நேற்றிரவு, பிரதமர் வேட்பாளர்களான ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

விவாதம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, விவாதித்துக்கொண்டிருந்த லிஸ் ட்ரஸ், திடீரென தன் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு, ’ஐயோ கடவுளே’ என அலற, உடனடியாக விவாத நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

பிரித்தானிய பிரதமர் தேர்தல் விவாதம் திடீர் நிறுத்தம்: நேரலையில் மக்களை அதிர்ச்சியடையவைத்த சம்பவம் | British Prime Minister Election Debate

Image:
Talk TV debate

மக்கள் என்ன நடந்தது என்று புரியாமல் திகைத்துப்போயிருந்த நிலையில், அந்த விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததே நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த Kate McCann என்னும் பெண் திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டுதான் லிஸ் ட்ரஸ் ஐயோ கடவுளே என பதறினாராம்.

பிரித்தானிய பிரதமர் தேர்தல் விவாதம் திடீர் நிறுத்தம்: நேரலையில் மக்களை அதிர்ச்சியடையவைத்த சம்பவம் | British Prime Minister Election Debate

இதற்கிடையில், விவாத மேடையில் நின்றுகொண்டிருந்த ரிஷி சுனக்கோ, ஓடோடிச் சென்று Kate என்னும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரை தாங்கிப் பிடித்துக்கொண்டாராம்.

இந்த சம்பவம் நேரடி ஒளிபரப்பில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது Kate McCann நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.+

பிரித்தானிய பிரதமர் தேர்தல் விவாதம் திடீர் நிறுத்தம்: நேரலையில் மக்களை அதிர்ச்சியடையவைத்த சம்பவம் | British Prime Minister Election Debate

Image – sky

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.