சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கேமரூன் நோரி, சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பிரிட்டனின் கேமரூன் நோரி, ஸ்பெயின் நாட்டின் வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் கேமரூன் நோரி 7-6 (7-4), 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதினார். இந்த போட்டியில் சிட்சிபாஸ் 7-6 (7-5), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் இஸ்னரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.