இன்ஸ்டண்ட் லோன் ஆப்கள் மூலம் கடன் – சுமார் ரூ.500 கோடிக்கு மேல் பண மோசடி.!

ரூ.500 கோடிக்கு மேல் செல்போன் கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரூபாய் 500 கோடிக்கு மேல் உடனடி கடனுதவி செய்வதாக மோசடி செய்தும், மிரட்டி பணம் பறித்தும் வந்த கும்பலை முறியடித்துள்ளது டெல்லி காவல்துறை. இதன் பேரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
செல்போன் ஆப் கடன் செயலிகள் மூலம் உடனடி கடன் வழங்குவதாக கூறி அதிக வட்டிகளுடன் வசூலித்தும், பின்னர் பயனாளர்கள் சுயவிபரங்களை திருடியும், பயனர்களை மிரட்டியும் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்துவந்த கும்பலை முறியடித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது டெல்லி காவல்துறை. மேலும் சீன நாட்டவர்களே இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர் என்றும், மோசடி செய்து மிரட்டி பறிக்கப்படும் பணங்கள் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறது என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளனர்.
image
டெல்லி காவல்துறையின் உளவுத்துறை (IFSO)பிரிவுக்கு பணமோசடிகள் புகார்கள் வந்த நிலையில்,அதை சார்ந்த நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. அந்த ஆய்வில் 100க்கும் மேற்பட்ட பயனர்கள் பணமோசடிக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2 மாதங்களுக்கு மேலாக மறைமுக நடிவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி உளவுத்துறை (IFSO), டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலும் இந்த நெட்வொர்க் பரவியிருப்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் இரண்டு பெண்கள் உட்பட 22 பேரை தற்போது கைது செய்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது டெல்லி காவல்துறை.
image
மோசடி குறித்து பேசிய போலீசார், அவர்கள் பயன்படுத்திய ஆப் செயலிகள் மூலம் பயனர்களிடமிருந்து பல தவறான நடவடிக்கைக்கு அனுமதிக்கும் அனுமதிகளைப் பெற்று இருக்கின்றனர். மேலும் பயனர்களின் காண்டாட்கள், சாட்கள், சுயவிபரங்கள் மற்றும் படங்களுக்கான அனுமதியை பெற்ற பிறகு, மோசடி கும்பல் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பயனர்களின் முக்கியமான தகவல்களைப் பதிவேற்றி இருக்கிறது என்று தெரிவித்தனர்.
விண்ணப்பங்கள் ரூ.5000 முதல் ரூ,10,000 வரை சிறிய அளவிலான கடன்களை வழங்குவதற்காக இந்த ஆப்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிறிய கடன் தானே என்று பயனர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பிறகு பயனர் அத்தகைய பயன்பாடுகளில் இருக்கும் ஆப் ஒன்றைப் பதிவிறக்கி, பயன்பாட்டிற்கான அனுமதிகளை வழங்குவார். பின்னர் சில நிமிடங்களில் அவரது கணக்கில் கடன் பணம் வரவு வைக்கப்படும்.
image
பின்னர் பயனர்கள், போலி ஐடிகளில் பெறப்பட்ட வெவ்வேறு எண்களில் இருந்து கடன் அழைப்புகளைப் பெறத் தொடங்குவார்கள், கடன் பெற்றபிறகு அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கத் தவறினால், அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று மிரட்டி பணம் பறிப்பார்கள். சமூக பயத்தின் காரணமாகவும், நம் பெயருக்கு கலங்கம் வந்துவிடுமோ என்னும் பயத்தின் காரணமாகவும் பயனர்கள் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் அது ஹவாலா அல்லது கிரிப்டோகரன்சிகளாக மாற்றப்பட்ட பிறகு சீனாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை துணை ஆணையர் (IFSO), கே.பி.எஸ். மல்ஹோத்ரா தெரிவித்தார்.
image
மேலும் ரூ.5000 முதல் ரூ,10,000 வரையிலான கடன்களுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் பறிக்கப்பட்டிருப்பதும், அதன் பேரில் பலர் தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மோசடி கும்பல் பல கணக்குகளைப் பயன்படுத்திய நிலையில் அந்த ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு நாளைக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பண மோசடிக்கு பின்பலமாக பல சீன நாட்டினர் இருப்பதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.