அதிர்ச்சி! கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகம் என்ற பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்தரித்த அவர் கருக்கலைப்பு செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து   உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி … Read more

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை… தென்னிந்தியாவுக்கு பின்னடைவா?!

தற்போது 543 ஆக இருக்கும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க பா.ஜ.க அரசு திட்டம் வகுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஆண்டு கூறினர். அதையடுத்து, இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதமாக எழுந்தது. தற்போது, மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெய்ராம் ரமேஷ் 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், “2031-ம் ஆண்டு மக்கள் … Read more

மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதால் மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றுதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து டான்ஸ்டியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 மாதங்களில் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளின் மறுவாழ்வுக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு சலுகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை … Read more

தற்கொலை செய்துகொண்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் கண்கள் தானம்

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர், நடிகர், ஆந்திர முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவிற்கு 8 மகன்கள் மற்றும் லோகேஸ்வரி, புரந்தரேஸ்வரி, புவனேஸ்வரி, உமா மகேஸ்வரி என 4 மகள்கள். இதில், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவவேஸ்வரி. உமா மகேஸ்வரி (52), என்.டி.ஆரின் 4-வது மகள். இவர் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மதியம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் படுக்கை அறை மின் … Read more

'எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது' – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் காய்தா தீவிரவாத கும்பல் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய … Read more

ஆபரேஷன் சக்சஸ் : தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிந்தனர்..!

பிரேசிலில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா எனப் பெயரிடப்பட்ட இந்த இரட்டை குழந்தைகளின் தலைப்பகுதி ஒட்டியப்படியே இருந்தது. அவர்கள் மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டுசெல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்தின் கைதேர்ந்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளைப் பயன்படுத்தி பல மாத ஆராய்ச்சியின் மூலம் அறுவை சிகிச்சை செய்து, … Read more

ஈசான் ஆற்றில் இராமர் பெயர் பொறிக்கப்பட்ட மிதக்கும் கல் கண்டெடுப்பு.!

உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் பாயும் ஈசான் ஆற்றில் இராமர் பெயர் பொறிக்கப்பட்ட மிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தானா பேவர் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் சிலர் ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது, கருப்பு நிறத்தில் ஆற்றில் மிதந்து வரும் கல்லை கண்டுள்ளனர். சுமார் 5.7 கிலோ எடை கொண்டுள்ள கல் இராமாயண காலத்தில் இலங்கைக்கு இராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கிராம மக்கள் கூறினர். மேலும், அந்த கல்லை பிரதிஷ்டை செய்து வழிபட முடிவெடுத்துள்ளதாகவும் கிராம … Read more

கோத்தபய ராஜபக்சவை கைது செய்ய உடனே கைது செய்யுங்கள்! சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலுக்கு இங்கிலாந்து எம்.பி.கடிதம்…

லண்டன்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை கைது செய்ய உடனே நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கென்னத் ஜெயரெத்னம் சிங்கப்பூர் நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஏஜி லூசியன் வோங்கிற்கு (ஏஜி லூசியன் வோங் – சிங்கப்பூர் வழக்கறிஞர் ஆவார், இவர் 2017 முதல் சிங்கப்பூரின் ஒன்பதாவது அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார்) கோத்தபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டி, அவரை கைது செய்யுமாறு  கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் ராஜபக்சேக்களின் தகுதியற்ற … Read more

ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 13,734 பேருக்கு கொரோனா… 34 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 13,734 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,50,009 ஆக உயர்ந்தது.* புதிதாக 34 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more